மத்தளயில் விமான நிலையத்துக்கு பதிலாக, குளத்தை கட்டியிருக்கலாம் -பொது பலசேனா / இராணுவ சீருடையில் வந்த கோஷ்டி, 2 கோடி ரூபா நகைகள் கொள்ளை / மது, இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு



 

மத்தளயில் விமான நிலையத்துக்கு பதிலாக குளத்தை கட்டியிருக்கலாம் -பொது பலசேனா-
அம்பாந்தோட்டையின் மத்தளயில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மஹா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்று தெரிவித்துள்ள பொதுபலசேனா ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் இவ்வகையான பயனற்ற திட்டங்களை ஜனாதிபதிக்கு கூறி மக்களின் நிதிக்கு ஆப்பு வைக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
பொதுபலசேனாவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில், ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் புதுமையானவர்கள். விசித்திரமான ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்கள்.
உண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் ஆலோசகராக இருந்திருந்தால் நிச்சயம் மத்தளயில் விமான நிலையத்தை கட்ட அனுமதித்திருக்க மாட்டேன். மாறாக பராக்கிரம சமுத்திரம் போன்று பாரிய குளத்தை கட்டுமாறு வலியுறுத்தியிருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடையைச் சோதனையிடுவதாக கூறி இராணுவ சீருடையில் வந்த கோஷ்டி 2 கோடி ரூபா நகைகள் கொள்ளை-
தங்கநகை தொழிற்சாலையில் கஜ முத்துக்கள் மறைத்து வைத்திருப் பதை சோதனையிட வந்ததாகக் கூறி துப்பாக்கிகளுடன் இராணுவ சீருடையில் வந்த கோஷ்டி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கண்டி நகரில் நிகழ்ந்துள்ளது.
கண்டி பேராதனை வீதியில் அமைந்துள்ள தங்க நகை தொழிற்சாலையிலேயே இக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று இரவு 8.00 மணியளவில் இராணுவ சீருடைக்கு சமமான உடையில் துப்பாக்கிகளுடன் வந்த சிலர் அங்கு கஜ முத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அங்குள்ளவர்களை அச்சுறுத்தி சோதனை செய்வது போன்று நடித்து அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு கோடி ரூபா தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கண்டி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மது, இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு-
வெசாக் வாரத்தை முன்னிட்டு நாளை 24ம், நாளை மறுதினம் 25ம் திகதிகளில் மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கலால் திணைக்களம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.
அத்துடன் இவ்விரு நாட்களும் இறைச்சிக்கடைகள் மற்றும் சூது நிலையங்கள் என்பவற்றையும் மூடுமாறு கலால் திணைக்களம் கோரியுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger