கடந்த 22-ஆம் தேதி லண்டனில் வுல்விச் என்ற இடத்தில் பணியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த லீ ரிக்பி என்ற பிரிட்டிஷ் ராணுவ வீரரை இரண்டு பேர் படுகொலை செய்தனர். பிரிட்டிஷ் ராணுவத்தினரால் இஸ்லாமியர்களை கொன்றதற்கு பழி வாங்கும் விதமாக இந்த கொலை செய்யப்பட்டது என்று அவர்கள் கூறியுள்ளனர். இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்ட போதிலும் லண்டனில் கலவரங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
லண்டனில் உள்ள போர் நினைவுச் சின்னங்களில் நேற்று இஸ்லாம் என்ற வார்த்தைகள் எழுதியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மறைக்கப்பட்டது. போரில் இறந்த ராணுவ வீரர்களுக்கும், மிருகங்களுக்கும் எழுப்பப்பட்டிருந்த நினைவுச் சின்னங்களில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
இந்தப் படுகொலைக்குப் பின், முஸ்லிம் மக்கள் மீது 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாக ஒரு இயக்கம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் மக்களை எதிர்க்கும் அமைப்பின் மூலம், திரட்டப்படும் நன்கொடை தொகை, அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுவதாகக் கூறி, அதனை மற்றொரு சமூக இயக்கமான ஹெல்ப் பார் ஹீரோஸ் மறுத்துள்ளது.
லண்டன் பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் காவல் துறையினருக்கும், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. 1000க்கும் மேற்பட்ட ஈடிஎல் இயக்கத்தின் ஆதரவாளர்கள் சரணடைய மாட்டோம் என்ற வாசகத்துடனும் இறைச்சி வெட்டும் கருவிகளின் படங்களுடனும், டவுனிங் தெருவில் ஊர்வலம் சென்றார்கள்.
கிரிம்ஸ்பி என்ற இடத்தில் உள்ள மசூதியில், பெட்ரோல் வெடிகுண்டு வீசித் தாக்கியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்சால் என்ற இடத்தில், இதுபோன்ற ஊர்வலத்திற்குப்பின், பொது ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட இருவரைக் காவதுறையினர் தண்டித்துள்ளனர். போர்த்ஸ்மவுத் நகரில், இஸ்லாமிய மையம் அருகே கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்த வாலிபர் ஒருவருடன் மூன்று பேரைக் கைது செய்தது, வன்முறையைத் தூண்டியுள்ளது.
ரிக்பியின் சாவு தொடர்பாக 50 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லிங் பகுதியில் உள்ள அவரது தாயாரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
லிக்பிக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் மொட்டையடித்த தலையுடன் கையில் செயின்ட் ஜார்ஜ் கொடியுடன் ஊர்வலமாகச் சென்றனர். இதனைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
Post a Comment