1998ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக குறிப்பிடப்படும் அன்டனோவ் 24 லயன் எயார் விமானத்தின் பாகங்களைத் இன்று (04) மேற்பரப்பிற்கு கொண்டுவர முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் இவ் விமானத்தின் பாகங்கள் மீட்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சுமார் 15 வருடங்களுக்கு முன் இரணைதீவு கடற்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பகுதிகளை தேடும் பணிகளில் திருகோணமலை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய இரணைதீவு கடற்பகுதியில் தேடுதல் மேற்கொண்ட கடற்படையினர் சில பாகங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
தினம் விமானம் 16 துண்டுகளாக உடைந்து இருப்பதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அன்டனோவ் 24 லயன் எயார் 1998 செப்டம்பர் மாதம் 4 ரஷ்ய பிரஜைகள் உட்பட 55 பேருடன் பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கிப் பயணித்த சுட்டு வீழ்த்தப்பட்டது.
Post a Comment