இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியை எட்டியுள்ளதாக 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் இறுதி நிலவரத்தை இந்திய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, நேற்று வெளியிட்டார்.
இதன்படி 2011 மார்ச் 1ம் திகதி நிலவரப்படி நாட்டின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 7 லட்சத்து 26ஆயிரத்து 932.
இது இதற்கு முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பை விட, 18 சதவீதம் அதிகம். அதேநேரத்தில், ஆண்களின் எண்ணிக்கையை விட, பெண்களின் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் அதிகபட்சமாக 25 சதவீத மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
ஒட்டு மொத்தமாக கிராமப்புறங்களில் 83 கோடி பேரும், நகப்புறங்களில், 38 கோடி பேரும் வசிக்கின்றனர்.
அதேபோல் 2001ல், 64 சதவீதமாக இருந்த கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 2011ம் ஆண்டில் 73 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment