சத்தியத்தை பிறரிடம் சேர்க்கும் அழைப்புப் பணிக்கு வேராக இருப்பது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ‘வீடியோ விஷன்’ என்றால் மிகையாக மாட்டாது. நாடு தழுவிய ரீதியில் பரவலாக நடைபெறும் மார்க்க நிகழ்ச்சிகளை உடனுக்குடன் வீடியோ செய்து, பார்ப்போரை ஈர்க்கும் விதத்தில் தெளிவான முறையில் ஒளி – ஒலிப் பதிவுகள் செய்து, அவைகள் DVD க்களாக விநியோகிக்கப்பட வேண்டியது இன்றியமையா அம்சமாகும். இப்பணியினை திறம்படச் செய்வதற்கு எமக்கு என்று சொந்தமாக அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு வீடியோ கமராவும், ஒலிப்பதிவுக்கான சாதனங்களும் தேவைப்படுகின்றன.
இவற்றை கொள்வனவு செய்வதற்கு சுமார் 10 இலட்சம் ரூபாய்கள் எமக்கு அவசியப்படுகிறது. நல்லுள்ளம் கொண்ட அன்பர்கள் ஓரிறைக் கொள்கையை வளர்க்க உதவும் இந்நற்பணிக்கு தாராளமாய் அள்ளி வழங்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.
Post a Comment