சிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்கான பணிகளை முன்னெடுத்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பணிகளில் ஒன்றாக இன்று 27.04.2013 சனிக்கிழமை முதல் இஸ்லாமிய அடிப்படை கொள்கை வகுப்பு ஒன்றை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் ஆரம்பித்தது.
இதில் ஏராளமான ஆண், பெண் சகோதர, சகோதரிகள் கலந்து பயனடைந்தார்கள்.
இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை தொடர்பான வகுப்பு சகோதரர் அப்துர் ராசிக் அவர்களினாலும், இறைவனின் படைப்பாக்கம் என்ற தலைப்பில் சகோதரர் தவ்சீப் அவர்களும் சிங்கள மொழியில் சிறப்பாக உரையாற்றினார்கள்.
இந் நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் 011 2677974 என்ற தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
Post a Comment