நுவரெலியா வசந்த காலத்துக்கு நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் இம்முறை போக வேண்டாமெனவும் இதற்கான அறிவிப்பை நுவரெலியச ஜுஆ பள்ளிவாசல் நிருவாக சபை விடுப்பதாகவும் கூறி குறுந் செய்தியை முதலில் அனுப்பியதாக கூறப்படும் நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.
குறித்த குறுந் செய்தியை முதலில் பகிர்ந்துகொண்டவர் என கருதப்படும் குறித்த நபர் கொழும்பு பிரதேசத்தவர் எனவும் அவர் கொழும்பின் தனியார் பாடசாலையொன்றின் மாணவனெனவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இம்முறை நுவரெலியா வசந்த காலத்தில், வெளிப் பிர தேச முஸ்லிம்களை நுவரெலியாவுக்கு வரவேண்டாம் என நுவரெலிய ஜும்ஆ பள்ளிவாசலின் உரிமை கோரலுடன் குறுந் செய்தி யொன்று நாடளாவிய ரீதியில் பரப்பப்பட்டுள்ளது.
எனினும் குறித்த குறுந்செய்தி தம்மால் அனுப்பப்படவில்லை. எனவும் நுவரெயாவுக்கு வெளிப்பிர ேதச முஸ்லிம்கள் தாராளமாக வரமுடியுமெனவும் அங்கு எவ்விதமான பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை எனவும் பள்ளிவாசல் நிர்வாகம் உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் நுவரெலிய ஜும்ஆ பள்ளிவாசலின் நிர்வ ாக சபையினர் இது தொடர்பில் முறையிட்டனர்.
இதனைடிப்படையில் குறித்த குறுந் செய்தி தொடர்பில் விசாரணைகளை முடிக்கிவிட்ட குற்றப் புலனா ய்வுப் பிரிவினர் குறித்த குறுந்செய்தியை முதலில் பகிர்ந்துகொண்டவரை கண்டு பிடித்தனர்.
குறித்த குறுந் செய்தியானது கொழும்பு பிரதேச தனியார் பாடசாலையொன்றின் 15 வயது மாணவன் ஒருவரினால் அவரது உறவினர்களுக்கு முதன் முதலில் பகிரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்தே பலருக்கு அந்த குறுந் செய்தி பரவியுள்ளது.
எனினும் குறித்த மாணவன் குறித்த குறுந் செய்தியின் பாரதூரத்தை அறியாதே பகிர்ந்து கொண்டுள்ளார் என தெரிவித்தார்.
Post a Comment