ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உகண்டாவுக்குப் பயணம்





ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் உகண்டாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

உகண்டாவுக்கான ஜனாதிபதியின் குறுகிய பயணம் எப்போது இடம்பெறும் என்று விரைவில் அறிவிக்கப்படும்.
உகண்டா அதிபர் யொவேரி முசேவேனி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். 

அவரது அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கம்பாலா செல்லவுள்ளார்.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த 13 நாடுகளில் உகண்டாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger