சவுதி அரேபியாவின் ஜித்தாவிலுள்ள பாலமொன்றுக்கு அருகில் பல நாட்களாக தங்கியிருக்கும் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ள போதிலும் தம்மை நாட்டிற்கு அழைத்துவருவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இலங்கைப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமக்கு பல நாட்களாக உணவு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த இடத்தில் சுமார் ஆயிரத்து 200 பணியாளர்கள் தங்கியுள்ளனர்.
இதேவேளை ‘சவூதி அரேபியாவின் ’நிதாகத்’ என்ற புதிய சட்டத்தால் பலர் தொழில்வாய்ப்புக்களை இழக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஜூன் 9ம் தேதிக்குள் சவூதியில் சட்ட விரோதமாக பணிபுரிபவர்கள் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாமல் பணிபுரிபவர்கள் சவூதியை விட்டு வெளியேற வேண்டும் என்று சவூதி அரசாங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.நன்றி news1st
Post a Comment