தங்கம் கடத்த முயன்ற பெண் கைது / யாழ்: சிலிண்டர் வெடித்ததில் பெண் படுகாயம் / மானிப்பாயில் இராணுவ முகாம் அமைக்க காணி சுவீகரிப்பு


 

Print Friendly
தங்கம் கடத்த முயன்ற பெண் கைது- 
சுமார் 4.8 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற பெண்ணொருவரை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவுக்கு தங்கத்தை கடத்துவதற்கு முயன்ற ராகமையை சேர்ந்த பெண்ணொவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையில் அடிக்கடி பயணிக்கும் ஒருவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தங்கத்தை பொத்தான்கள் போல தயாரித்து தன்னுடைய பயணப்பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கடத்துவதற்கு முயன்ற போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்: சிலிண்டர் வெடித்ததில் பெண் படுகாயம்-
யாழ்ப்பாணத்தில் சிலிண்டர் வெடித்ததில் பெண்ணொருவர் படுகாயமடைந்து வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச்சேர்ந்த 34 வயதான மோகனதாஸ் நிரஞ்சனி என்பவரே இவ்வாறு படுகாயமடைந்து யாழ்போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமைப்பதற்காக இன்றிரவு மண்ணெண்னை குக்கரை பற்றவைத்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மானிப்பாயில் இராணுவ முகாம் அமைக்க காணி சுவீகரிப்பு-
யாழ். மானிப்பாய் பிரதான வீதியில் உள்ள கூழாவடிப் பகுதியில் இராணுவத்தின் 11ஆவது சிங்க படைப்பிரிவுக்கான நிரந்தர முகாம் அமைப்பதற்கு தனியாருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் கொண்ட காணி படையினரால் சுவீகரிக்கப் பட்டுள்ளது.
காணி சுவிகரிப்புச் சட்டத்தின் அத்தியாயம் 460 (2)ஆம் பிரிவின் கீழ் இக்காணி சுவிகரிக்கப் பட்டுள்ளதாக யாழ். மாவட்ட காணி சுவிகரிப்பு உத்தியோகஸ்தர் சிவசுவாமியினால் கையொப்பமிடப்பட்ட துண்டுப் பிரசுரமொன்று அக்காணி அமைந்துள்ள பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த காணியில் நீண்ட காலமாக இராணுவத்தின் முகாம் இருந்து வருகின்ற நிலையில், அதில் நிரந்தர படைமுகாம் அமைக்கும் நோக்கில் இந்த காணி சுவீகரிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
குறித்த காணியின் உரிமையாளர்கள், அக்காணிக்கு அண்மையிலேயே தங்கியுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
யாழ் மாவட்டத்தில் கடந்த வாரம் 6,531 ஏக்கர் காணி, வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் சுவீகரிக்கப் பட்டுள்ளதால் இதற்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றன.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger