உயிருக்கு போராடிய காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த காதலன்; தானும் தற்கொலை!! / முன்னாள் அமைச்சர் பங்களா திருட்டு தொடர்பில் நால்வருக்கு விளக்கமறியல்



 

Print Friendly
உயிருக்கு போராடிய காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த காதலன்; தானும் தற்கொலை!!-
காதல் விவகாரத்தினால் மனமுடைந்த காதலி தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்காக போராடி கொண்டிருந்த நிலையில் அவருக்கு விஷத்தைக் கொடுத்து விட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உயிருக்காக போராடி கொண்டிருந்த காதலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு சென்றே காதலன் பாலில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார்.
மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
மொரட்டுவை பல்கலைகழக மாணவி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போதே வடகொழும்பு வைத்திய பீடத்தைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவன் பாலில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இதில், பேராதனை மாரஸ்ஸன்ன ஒலுவாவத்தையில் வசிக்கும் மொரட்டுவை பல்கலைகழகத்தை சேர்ந்த 24 வயது மகேஷிகா பிரியங்கி குலரத்ன என்ற மாணவியும் அவரது காதலன் என்று சொல்லப்படுகின்ற பொல்ஹாவலையைச் சேர்ந்த 25 வயதான அமில சத்துரங்க என்ற மாணவனுமே பலியாகியுள்ளனர்.
வைத்திய மாணவன் பொல்ஹாவலையிலுள்ள அவரது வீட்டில் வைத்து உடலுக்கு நஞ்சேற்றி கொண்ட நிலையில் குருணாகல் வைத்தியசாலையில் வைத்து மரணமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
காதல் விவகாரத்தினால் மனமுடைந்த மாணவி தூக்க மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் மாரஸ்ஸன்ன வைத்தியசாலையில் கடந்த 20 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மறுநாள் 21 ஆம் திகதி மாற்றப்பட்டார்.
சிகிச்சையளிக்கப்பட்டதன் சுகமடைந்த மாணவியை 22 ஆம் திகதி வீட்டுக்கு செல்வதற்கு வைத்தியர்கள் அனுமதியளித்தனர். அன்று பெற்றோர் சமூகமளிகாமையினால் பெற்றோர் வரும் வரையிலும் மாணவி வாட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் அவருடைய காதலனான வைத்திய மாணவன் அன்றுமாலை 5 மணியளவில் அவரை பார்ப்பதற்கு வைத்தியசாலைக்கு வருதை தந்துள்ளார்.
இருவரும் கொஞ்சநேரம் கதைத்துக் கொண்டிருந்துள்ளனர். பின்னர் இரவு 8 மணியளவில் பால் மற்றும் கடலை பக்கற்றுடன் வாட்டுக்கு வருகை தந்த காதலன் அவற்றை கொடுத்து விட்டு சென்றதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.
மாணவி பக்கற்றிலிருந்த பாலை குடித்ததன் பின்னர் சத்தம் போட்டதாகவும் பின்னர் சுயநினைவை இழந்து விட்டதாகவும் வாட்டில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவர் மரணமடைந்து விட்டார்.
மாணவிக்கு பால் பக்கற்றை கொடுத்த மாணவனை தேடிபார்த்த போது அவர் தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
மாணவியின் உடற்பாகங்கள் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வைத்திய மாணவனின் யாரும் அரசாங்க வைத்தியர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் பங்களா திருட்டு தொடர்பில் நால்வருக்கு விளக்கமறியல்-
முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெலின் கீகியனகந்த பங்களாவின வைக்கப்பட்டிருந்த சுமார் 62 இலட்சம் ரூபா பெறுமதியான கடிகாரம் உள்ளிட்ட இன்னும் சில பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையூம் எதிர்வரும் 06 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் மத்துகம நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே பிரதம நீதவான் தமிந்த ராமநாயக்க மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
ராசையா முத்துசாமி(வயது 56)இ சவூந்தராஜா சந்திரசேகர( வயது 25)இ ராஜரட்னம் மாரதீபன்( வயது 17) மற்றும் ரவிந்திர பிரசன்ன( வயது 17) ஆகிய நால்வருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த கொள்ளை தொடர்பில் மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger