தமது நாட்டினுள்ளே தயாரிக்கப்பட்ட புதுவித ஆயுதங்கள் மற்றும் போர்க்கால உபகரணங்கள் எவையென்பதை, மத்திய ஈரானில் நடைபெறவுள்ள போர்ப் பயிற்சியின்போது காண்பிக்கவுள்ளதாக ஈரானின் இரண்டாவது கட்டளையிடும் அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிகேடியர் ஜனரால் கியுமாஸ் ஹிதரி சென்ற வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது,
எமது புத்தம்புதிய குண்டு தாக்காத தனிநபர் வாகனங்கள், ஆயுதங்கள், ஸ்னைபர் துப்பாக்கி, வான்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள உபகரணங்கள் மற்றும் ஏவுகணையுடன் தொடர்புற்ற புதிய உபகரணங்கள் என்பன பைத்துல் முகத்தஸ்ஸில் நடாத்தப்படவுள்ள பயிற்சிநெறியின்போது வெளிக்காட்டப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மே மாதம் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள போர்ப் பயிற்சிநெறி தொடர்பில் உயர்ரக தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஈரான் கடந்த பல ஆண்டுகளாக புதுப்புது ஆயுதங்களைக் கண்டறிவதில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றது. அந்தவகையில் போர்க்கால பயிற்சி நெறியையும் உதவியாகக் கொண்டுள்ளது.
.jpg)
Post a Comment