பொரலஸ்கமுவ, வெரஹர பிரதேசத்தில் பாவனைக்கு தகுதியற்ற தேயிலைத் தூள் ஒரு தொகுதியை எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதலைத் தொடர்ந்து இக் கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கழிவு தேயிலை தூள் 7,000 கிலோ கிராம் மீட்கப்பட்டுள்ளது.
கழிவு தேயிலை தூள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொரலஸ்கமுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment