இலங்கை ஆயுதப்படைகளுக்குப் பயிற்சியளிப்பதில் மகிழ்ச்சிய்டைகிறோம் : அமரிக்கா


US-lanka

தமிழ்ப்பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைப் புலம் பெயர் குழுக்களும் தனி நபர்களும் உளவாளிகள் அமரிக்கா உட்பட அழிவு சக்திகளுக்குக் காட்டிக்கொடுக்கும் நிலையில் இலங்கை அரச படைகளுக்குப் பயிற்சியளிப்பதில் அமரிக்கா மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளது.
எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கியுள்ளது.எல்லைப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கைக் கடற்படையினருக்கு அமெரிக்க அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டுத் தூதரகம் அறிவித்துள்ளது. திருகோணமலை கடற்படை முகாமில் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினருக்கு அமெரிக்கா பயிற்சிகளை வழங்கி வருகின்றது.
கடற்படையினர், கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் ஆகியோருக்கு எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமரிக்கா தலைமையிலான உலக ஏகபோக அரசுகளுடன் இணைந்து வன்னிப்படுகொலைகளை நடத்த உதவிய அதே தமிழ் எதிரிக்குழுக்கள் இன்றும் ஈழம் பெற்றுத்தருவதாக மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திவருகின்றன. புலம் பெயர் நாடுகளில் அரசியல் பிழைப்பு நடத்தும் குழுவினர் இன்று இனச்சுத்திகரிப்பிற்குத் துணைபோகின்றனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger