வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடாத்த அரசு நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்க்க போவதாக தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அதன் மூலம் நாட்டில் பாரதூரமான சிக்கல் நிலைமை ஏற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவான புரிந்துணர்வு இல்லை என்பதால், எதிர்வரும் மே மாதம் முதல் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் பிரசாரங்களை தமது கட்சி ஆரம்பிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர், மாகாணங்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அரசாங்கம் வட மாகாணத்தில் சிங்கள மக்களை மீள்குடியேற்ற வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment