முதல்நாள் திருமணம்; மறுநாள், ‘டைவர்ஸ்’ இணைய தள காதல் ஜோடியின் கூத்து / ஹம்பாந்தோட்டையில் ரூ. 700 கோடியில் நவீன ஆஸ்பத்திரி



Print Friendly
facebook.loveமுதல்நாள் திருமணம்; மறுநாள், ‘டைவர்ஸ்’ இணைய தள காதல் ஜோடியின் கூத்து-
ஜெய்ப்பூர்: இணையதளம் மூலமாக அறிமுகமாகி திருமணம் செய்த காதல் ஜோடி, கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான அடுத்த நாளே, பிரிந்த, பரபரப்பான சம்பவம், ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்தவர், சங்கர் லால். அசாமில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும், ராஜஸ்தானை சேர்ந்த, சீமா என்ற இளம் பெண்ணுக்கும், ஒரு மாதத்துக்கு முன், திருமண ஏற்பாடுகளை செய்து தரும், இணையதளம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஒருவரை ஒருவர், நேரில் பார்க்காமலேயே, சமூக வலைத் தளங்கள் மூலமாக, தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அடுத்த சில நாட்களிலேயே, இருவருக்கும், காதல் மலர்ந்து விட்டது. இதையடுத்து, திருமணம் செய்ய, முடிவு செய்தனர்.
இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில், சமீபத்தில், ஒரு கோவிலில், இருவரும் திருமணம் செய்தனர். அதற்கு, அடுத்த நாளிலேயே, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது, தகராறாக மாறியது. பொய்யான தகவல்களை கூறி, சங்கர், தன்னை ஏமாற்றி விட்டதாக, சீமா புகார் கூறினார்.
பதிலுக்கு, சீமா, தன்னை ஏமாற்றி விட்டதாக, சங்கரும் புகார் கூறினார். ஆத்திரமடைந்த, சீமாவின் பெற்றோர், கற்பழிப்பு புகார் கொடுக்கப் போவதாக, சங்கரிடம் எச்சரிக்கை விடுத்தனர். பதிலுக்கு, சங்கரும், மிரட்டினார்.
தகராறு முற்றியதை தொடர்ந்து, இரு தரப்புமே, போலீசில் புகார் தெரிவித்தனர். பின், போலீஸ் ஸ்டேஷனிலேயே, இரு தரப்பினரும், அமர்ந்து பேசி, சுமுக முடிவுக்கு வந்தனர். இதன்படி, இரு தரப்பினரும், புகாரை வாபஸ் பெற்றனர்.
சீமாவும், சங்கரும், »ஒருவரை ஒருவர், சரியாக புரிந்து கொள்ளாமல், அவசர கோலத்தில், திருமணம் செய்து விட்டோம். எங்களின் திருமணம் செல்லாது. ஒருவரை ஒருவர், பிரிகிறோம்’ என, கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு, பிரிந்து சென்றனர்.
திருமணம் முடிந்த அடுத்த நாளே, அவர்களின், திருமண பந்தமும் முடிவுக்கு வந்தது. இந்த விவகாரம், ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் ரூ. 700 கோடியில் நவீன ஆஸ்பத்திரி-
ஹம்பாந்தோட்டையில் 700 கோடி ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆஸ்பத்திரியொன்றை நிர்மாணிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 850 கட்டில்களுடன் கூடிய மேற்படி ஆஸ்பத்திரி நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச் சர் மைத்திரிபால சிறிசேன தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மாகாண ஆஸ்பத்திரிகளில் ஏதும் குறை பாடு இருந்தால் அவற்றை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
இதன்படி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால, சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் லால் பனாபிடிய, அடங்கலான குழு ஹம்பாந்தோட்டையிலுள்ள ஆஸ்பத்திரிகளை நேரில் சென்று பார்வையிட்டது.
இதன் போது ஆஸ்பத்திரிகளில் காணப்படும் குறைபாடுகளை தீர்க்கவும் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்களின் குறைபாட்டை நிவர்த்திக்கவும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கட்டட திருத்தப் பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இந்த விஜயத்தில் பங்கேற்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, புதிய கட்டட நிர்மாணப் பணிகள் மே மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்றார்.
நெதர்லாந்து அரசாங்கம் இலங்கையில் இரு ஆஸ்பத்திரிகளை நிர்மாணிக்க நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.
இதில் முதலாவது ஆஸ்பத்திரி நுவரெலியா ஆஸ்பத்திரிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு இரண்டாவது ஆஸ்பத்திரி ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட உள்ளது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger