சவூதியில் தங்கியுள்ள 6000 பேரையும் அடுத்தவாரம் முதல் நாடு திரும்ப ஏற்பாடு-
சவூதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்கள் அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.
சவூதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்கள் அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.
சவூதி அரேபியாவில் சுமார் 6 ஆயிரம் இலங்கைப் பணியாளர்கள் சட்ட விரோதமாக தங்கியுள்ளனர். தம்மை நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரி பலர் கடந்த வாரங்களில் சர்பிய பாலத்திற்கருகில் குழுமியிருந்தனர்.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்ப பணியக அதிகாரிகள் சவூதி அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். இதன்படி சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருக்கவும் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் வரை தாம் முன்னர் பணி புரிந்த இடங்களில் பணியாற்ற அனுமதிக்கவும் இணக்கம் காணப்பட்டது.
நாடு திரும்ப விரும்புபவர்களுக்கு தம்மை தூதரகத்தில் பதியுமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி அநேகர் தம்மை ஜித்தாவிலும் ரியாதிலும் பதிந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய கூறினார்.
இவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளதோடு தினமும் 30 முதல் 50 பேர் வரை அழைத்து வர உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தாம் முன்னர் பணி புரிந்த இடங்களில் பணியாற்ற அனுமதிக்கப் படாமல் பொது இடங்களில் தங்கி உள்ளவர்கள் முதலில் அழைத்து வரப்படவுள்ளதோடு ஏனையவர்கள் அடுத்ததாக அழைத்து வரப்பட உள்ளனர்.
இதேவேளை தாம் முன்னர் பணி புரிந்த இடங்களில் மீண்டும் தற்காலிகமாக பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் தங்களுக்கு எதுவித தொழில் வாய்ப்பும் வழங்கப்படவில்லை என இலங்கை பணியாளர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 200 இலங்கை பணியாளர்கள் ஜித்தாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னால் தங்கியுள்ளதாக அறிய வருகிறது. இது தவிர சர்பியா பாலத்தின் கீழ் சுமார் 100 பேரும் விளையாட்டரங்கில் சுமார் 50 பேரும் தங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறின.
எதுவித வசதியுமின்றி உணவு மற்றும் குடிநீர் இன்றி அநேகர் கஷ்டப்படுவதாகவும் இலங்கை பணியாளர்கள் சிலர் கூறியுள்ளனர். ஒரு வேளை உணவே தங்களுக்கு வழங்கப்படுவதோடு உறவினர்களிடமிருந்து பணம் பெற்றே அங்கு தங்கியிருப்பதாகவும் அறிய வருகிறது.
மலேசியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர்-
மலேசியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட இப்ராகிம் அன்சார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக்கடிதத்தை அலரிமாளிகையில் வைத்து திங்கட்கிழமை பெற்றுக்கொண்டார்.
மலேசியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட இப்ராகிம் அன்சார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக்கடிதத்தை அலரிமாளிகையில் வைத்து திங்கட்கிழமை பெற்றுக்கொண்டார்.
Post a Comment