ஈரானின் தென்கிழக்குப் பகுதியில், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக இதுவரை குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தொலை தூரத்திலுள்ள சிஸ்டான் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.8 அளவுக்கு இருந்ததை தாங்கள் பதிவு செய்துள்ளதாக, அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே இதுதான் மிகவும் பெரியது என்று தலைநகர் டெஹ்ரானிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
எனினும் அங்குள்ள புஷேர் பகுதியில் உள்ள அணுமின் நிலையத்தை கட்டிய ரஷ்ய நிறுவனம், அதற்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பல மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கிழக்கே இந்தியா வரை உணரப்பட்டுள்ளது.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பல கட்டிடங்கள் ஆட்டம் கண்டன.
டில்லி தவிர ஜெய்பூர், சண்டிகர், அகமதாபாத் போன்ற நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
Post a Comment