20 அடி உயரத்திலிருந்து விழுந்த பெண்ணின் உடலை ஊடுருவிய இரும்புக்கோல்


தென்சீனாவின்  ஜியாங் ஸி மாநிலத்தில் செங் எனும் கிராமத்தைச் சேர்ந்த வுஸிங் ஸியான் (42 வயது)என்ற பெண் 20 அடி உயரத்திலிருந்து இரும்புக்கோலொன்றில் விழுந்து அதிசயத்தக்க வகையில் உயிர் பிழைத்துள்ளார்.

நிர்மாண பணியாளரான அவர் நிர்மாண தளமொன்றில் பணியாற்றிய வேளையிலேயே அவர் நின்றிருந்த மரத்தாலான தளம் உடைந்ததால் கீழே விழுந்துள்ளார்.
 
இதன்போது இரும்புகோல் அவரது தொடை வயிறு மார்பு என்பவற்றினூடாக கழுத்து வரை துளைத்துச் சென்றுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வு ஸிங்ஸியானுக்கு 5 மணிநேர அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு   அவரது உடலை துளைத்திருந்த இரும்புகோலை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். 
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger