இந்தியாவில் பெருகி வரும் கற்பழிப்பு சம்பவங்களைக் கண்டித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டன.
‘பதான்-பகானா சம்பவங்கள் மீண்டும் வேண்டாம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
மேலும், கற்பழிப்பு வழக்குகளில் நீதி வழங்கக்கோரி பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
“இந்தியாவில் சமீபத்தில் நடந்துள்ள கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளில் போலீஸ்காரர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஐ.நா.வும் கண்டித்துள்ளது. பல வழக்குகளில் போலீசார் குற்றவாளிகளாக உள்ளனர். எனவே, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். சாதி மற்றும் பாலின வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளுக்கு மத வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment