Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label இனவாதம். Show all posts
Showing posts with label இனவாதம். Show all posts

சப்ரகமுவ மாணவன் தாக்குதல் ; வளாகத்தில் இனவாத போஸ்டர்கள்


சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் இனந்தெரியாத 5 பேரினால் தாக்குதலுக்குள்ளாகி பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைகழக வளாகத்தில் “தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு இங்கு இடமில்லை… மீறியும் வந்தால் கொலை செய்வோம்… மாணவிகள் என்றால் கற்பழிப்போம்…” என்கிற பொருள்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக த கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் கொச்சை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்ததாகவும், மாற்றுமொழிக்காரர்களே இதை எழுதியிருக்கக்கூடும் என ஊகிக்க முடிவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த பளையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் என்ற மாணவனையே இனந்தெரியாத கும்பல் நேற்று அதிகாலை விடுதிக்குள் நுழைந்து தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் தீவிர விசாரணையினை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 



0 comments

முஸ்லிம் ஊழியர் வாயில் சப்பாதித்தியை தினித்து நோன்பை விட வற்புருத்திய சிவசேனா எம்பிக்கள் - Video



Shiv Sena MPs ‘force’ fasting Muslim staffer to eat chapati at Maharashtra Sadan Delhi
A group of around 11 Shiv Sena MPs, apparently angry over not being served Maharashtrian food, allegedly forced a Muslim catering superviser who was fasting for Ramzan to eat a chapati at the new Maharashtra Sadan in Delhi last week.
Within hours, IRCTC, the Indian Railways subsidiary that was catering for the Sadan, stopped all operations in protest, and complained in writing to the Maharashtra Resident Commissioner, saying the employee, Arshad Zubair S, had been “deeply pained and hurt… as religious sentiments are attached”.
letter sent to Maharashtra chief secretary J Saharia has named the 11 Shiv Sena MPs as Sanjay Raut (Rajya Sabha), Anandrao Adsul (Amravati), Rajan Vichare (Thane), Arvind Sawant (Mumbai-South), Hemant Godse (Nashik), Krupal Tumane (Ramtek), Ravindra Gaikwad (Osmanabad), Vinayak Raut (Ratnagiri-Sindhudurg), Shivaji Adhalrao Patil (Shirur), Rahul Shewale (Mumbai-South Central) and Shrikant Shinde (Kalyan).
IRCTC, the Indian Railways subsidiary that was catering for the Sadan, has stopped all operations in protest, and complained to the Maharashtra resident commissioner Bipin Mallick.
IRCTC deputy general manager Shankar Malhotra wrote an email to Mallick on July 17 saying the MPs misbehaved with the staff at the public dining and forced the resident manager Arshad to eat a chapati.
“The specific incident happened with the Resident Manager/IRCTC, Sh. Arshad who was forced to consume full chapati whilst he was having fast on the eve of Ramzan. The concerned has been deeply pained and hurt on this account as religious sentiments are attached,” Malhotra wrote.
Arshad too has complained to the resident commissioner.
“All the guests along with media reporters and staffs of Maharashtra Sadan got into kitchen where I was getting the orders prepared. They caught me and put the chapati into my mouth. I was wearing a formal uniform set as prescribed by IRCTC and everybody in the panel also knew my name as ‘Arshad’ as I was wearing the name tag. Even then they inserted chapati in my mouth which caused my fast to break on the eve of Ramzan. I was hurt with the thing they have done as religious sentiments are concerned,” Arshad said.
resident commissioner Mallick has sent a letter of apology to IRCTC expressing “his shock” at the incident.
The manager of the Sadan in his report about the incident has said “the mob”, which included the MPs’ supporters and members of the media, damaged the resident commissioner’s office.
“The mob threatened to break the glass door of RC’s chamber in New Maharashtra Sadan, forced an employee to open the door, occupied the cabin and started shouting slogans etc. Thereafter, the mob broke the wall clock in RC’s cabin and wrote ‘Jai Maharashtra’ on the wall,” the manager said in his report.

0 comments

அளுத்கம சம்பவத்துக்கு முழுப் பொறுப்பும் முஸ்லிம்களே எனக்காட்ட ஊடகங்கள் முயற்சி



எதிர்பார்த்தபடி அளுத்கம விவகாரத்தில் ஒட்டுமொத்த பொறுப்பையும் முஸ்லிம் சமூகத்தின் தலையில் ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடவடிக்கை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இருபகுதியினரும் சேர்ந்த ‘கலவரமாக’ குறித்த சம்பவத்தை சித்தரிக்க விளைந்துள்ள அதேவேளை தற்போது 23 பௌத்த சங்கங்கள் இணைந்து வெளியிடும் ‘உண்மைக் கதை’ என இன்றைய சிலோன் டுடே இது தொடர்பில் நன்கு வடிவமைக்கப்பட்ட விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்பயைில் முஸ்லிம்களே முதலில் பத்திராஜகொட தேரரை தாக்கியதாகவும், அதற்கு பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் உடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு எதிராக 15.06.2014 அன்று அளுத்கமவில் ராவணபலயவும், பொதுபலசேனாவும் இணைந்து ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு பொலிசார் அனுமதி வழங்கியிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் கூட்டம் முடிந்து கலைந்து சென்றவர்கள் மீது தர்கா நகர் பள்ளிவாசலில் கூடியிருந்த முஸ்லிம்களே தாக்குதல் நடாத்தியதாகவும் இதில் ஒரு பௌத்த பிக்கு மீதும் கல்லெறியப்பட்டு அவர் உடன் மயங்கி விழுந்தும் பொலிசார் நடவடிக்கை எடுக்கத் தவறியதனாலேயே கலவரம் வெடித்ததாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இச்சம்பவத்தில் சிங்களவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் வெலிபன்னையில் சிங்களவர்களது கடைகள் சேதமாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, கைதுசெய்யப்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், சிங்களவர்கள்தான் நூற்றுக்கணக்கில் சிறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சிங்களவர்களுக்கு நடந்தவற்றை ஊடகங்களுக்கு வெளிக்கெணர்வதற்கு தகவல் திணைக்களம் தடை விதிக்கப்பட்டதாகவும், ஆனாலும் சில முஸ்லிம் அரசியவாதிகள் முற்பட்டு இந்தப் பிரச்சினையை ஊடகங்கள் ஊடாக சர்வதேசமயமாக்கிவிட்டதாகவும் 23 பௌத்த இயக்கங்கள் கூட்டாகச் சொல்லியிருப்பதாகக் கூறி அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆக்கத்தில் சேதத்துக்குள்ளான முஸ்லிம்களது கடைகளையே சிங்களவர்களது கடைகள் போன்றும் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments

அளுத்கம வன்முறை சம்பவங்களின் தடயங்களை மறைக்க கோத்தபாய நடவடிக்கை?



அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட இனவாத மோதல்களின் பின்னர் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைப்பதற்கு முன்னரே, அழிவடைந்த கட்டிடங்களை சுத்தப்படும் பணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இராணுவத்தினரை ஈடுபடுத்தியிருந்தார்.

இரசாயன பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், பாதுகாப்புச் செயலாளர் இந்த பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்தியது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவங்கள் நடந்தமைக்கான சாட்சிய தடயங்களை அழிப்பதற்காகவா பாதுகாப்புச் செயலாளர் முன்கூட்டியே சுத்தப்படுத்தும் பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்தினார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

தீவைப்பு சம்பவம் ஒன்று நடைபெற்ற பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இரசாயன பகுப்பாவாளர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுக்கான பொருட்களை பெற்றுக்கொண்ட பின்னரே இந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும்.

எனினும் இந்த சட்ட நடவடிக்கை பின்பற்றப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது சாட்சியங்களை மறைக்கும் முயற்சியாக என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதனடிப்படையில், கடந்த ஜூன் 15 ஆம் திகதி அளுத்கம, தர்கா நகர் பிரதேசங்களில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட அழிவுகள் சுத்தப்படுத்தப்படுவதற்கு முன்னர் இரசாயன பாகுப்பாய்வு அறிக்கை பெறவேண்டும் எனவும் இதனால் சுத்தப்படுத்தும் பணிகளை நிறுத்துமாறும் மேலதிக நீதவான் அயேஷா ஆப்தீன் உத்தரவிட்டார்.

அதேவேளை சம்பவத்தின் கொல்லப்பட்டவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் எனினும் குறுகிய மரண விசாரணையில் வாளால் வெட்டப்பட்டதால் மரணம் சம்பவித்தது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் மரணம் தொடர்பான விசாரணைகளை நடத்திய சட்ட வைத்திய அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
0 comments

ரத்மலான பொருபான ஜும்மா பள்ளிவாசலுக்குத் தீ வைப்பு.

இன்று அதிகாலை ரத்மலான பொருபான ஜும்மா பள்ளிவாசலுக்கு இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. எனினும் தீ வைக்கப்பட்ட உடனேயே அதனை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை

0 comments

அளுத்கம விவகாரத்தின் ஆணிவேர்!


-மலிந்த செனவிரத்ன (The Nation பத்திரிகையின் தலைமை ஆசிரியர்)
உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க அமளிதுமளியான காலம் இது. ஒளிந்திருக்கும் அச்சுறுத்தல்களும் அச்ச உணர்வுகளும் மேகங்களாக உருவெடுத்து உண்மைக் காரணங்களை ஊதித் தள்ளிவிடக் கூடிய காலமிது. வதந்திகள் இலாவகமாகவும் வலு வேகமாகவும் பரவக் கூடிய நேரமிது. இது அடிப்படைவாதிகளுக்குரிய நேரம். ஆம்! எடுத்ததுக்கெல்லாம் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய பகுத்தறிவற்றோருக்குரிய நேரமே இது.
வீதியின் ஒவ்வொரு மூலை முடுக்கெங்கும் தற்போது அனைவருக்கும் பேச்சுப் பொருளாகியிருப்பது “அளுத்கம விவகாரம்”. நாட்டின் அமைதியின்மை, அச்சுறுத்தல், நாட்டின் தலைவிதியையே மாற்றக் கூடிய இவை தொடர்பான விவகாரங்கள் பற்றியே எங்கும் பேச்சு. அளுத்கம விவகாரம் களுத்துறை மாவட்டத்திலிருந்து மெல்லக் கசிந்து கொழும்பு மற்றும் பதுளை வரை சென்றது. “83-ஜூலை மறுபடியுமா?” என்கின்றனர் சிலர். உண்மை அதுவன்று. ஆனால் இப்போக்கு நீடித்தால் இறுதியில் அதுவே உண்மையாகிவிடவும் கூடும்.
முதல் கல்லை எறிந்தது யார் என்பது தொடர்பாக இன்னும் விவாதம் நீண்டுகொண்டே இருக்கின்றது. பலவாறான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. இதனைத் திட்டவட்டமாக வரையறுப்பது கடினம். ஏனெனில் தர்ஹா நகரில் பொதுபல சேனாவின் பேரணிக்கு பாதுகாப்புக்கென மிகச் சொற்ப அளவான அதிரடிப் படையினரே கடமையிலிருந்தனர். அதிரடிப்படை வட்டாரம் கூறுவதாவது, ”அத்தருணத்தில் பாதுகாப்புக்கென நாம் சொற்ப அளவினரே இருந்தோம். எம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதனால்தானோ என்னவோ முஸ்லிம் தரப்புகள் நாம் வன்முறையில் ஈடுபட்ட குழுவினருக்கே சாதகமாக செயற்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். எமக்கு வழங்கப்பட்ட கட்டளை பேரணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகும். நாம் எமக்கு வழங்கப்பட்டிருந்த கட்டளைகளுக்கு அமையவே செயற்பட்டோம். எம்மை குறை கூறுவது எவ்விதத்திலும் பொருத்தமற்றது.” எனினும் அது ஒரு அமைதிப் பேரணியாக இருக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டக்கூடிய பதாகைகளும் கூச்சல்களும் நிறைந்து அமளிதுமளியுமாகவே காணப்பட்டது. வெளிப்படையாகவே முஸ்லிம்களின் இனரீதியான உணர்வுகளை பாதிக்கக்கூடிய வகையிலும் வன்முறைகளைத் தூண்டக்கூடிய வகையிலுமே பெற்றோல் குண்டுகளும் ஆயுதங்களும் கொண்ட இனவாதிகள் செயற்பட்டனர். முதற் கல் எறியப்பட்ட மறுகணமே அதிகாரிகொட, அளுத்கம மற்றும் தர்ஹா நகர் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர் அவர்களது சொத்துக்களும் அடித்துத் துவம்சம் செய்யப்பட்டன, தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
சில மாதங்களுக்கு முன்பு இளவயது பிக்கு ஒருவரை துன்புறுத்தியதாகக் கூறி பிக்குகள் தலைமையில் அளுத்கமவிலுள்ள முஸ்லிம் நபரொருவருக்கு சொந்தமான வியாபார நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். பின்பு பாதுகாப்புக் கமரா ஆதாரங்களின் (CCTV evidence) மூலம் இளவயது பிக்கு துன்புறுத்தப்படவில்லை என்றும் வியாபார நிலையத்தை நிர்மூலமாக்குவதற்கான அப்பட்டமான சதியே அதுவென தெள்ளத்தெளிவாக தெரிய வந்தது. ஆக, இவ்வாறான திட்டமிட்ட சதிகளின் திணிப்புக்களை ஒப்பீட்டு ரீதியில் அலசி ஆராய்ந்து பார்க்கும் பட்சத்தில் தர்ஹா நகர் விவகாரத்தில் “முதற் கல் வீசியவர்கள் யார்?” என்பதைக் கணிப்பதற்கு ஒன்றும் கால அவகாசம் தேவைப்படாது. முஸ்லிம்களே முதலில் கற்களைக் கொண்டு தாக்கினர் எனும் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது.
வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசினார் என்று ஒற்றைச் சொல்லில் குற்றம் பிடித்து அஸாத் சாலி கைது செய்யப்படுகின்ற போது, முற்றுமுழுதாக இனரீதியான வெறுப்பை அனலாகக் கக்கி உமிழும் மதிப்பிற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்னும் சுதந்திரமாக நடமாடுவது சரியா?
பதற்றம் தணியாத நிலையில் அளுத்கமவில் பொதுபல சேனாவின் பேரணிக்கு தடை விதிக்காதது ஏன்?
தர்ஹா நகரின் கொந்தளிப்பின் போது அமைதியை நிலைநாட்டுமாறு பணிக்கப்படாமல், பேரணிக்கு பாதுகாப்பு வழங்குமாறு மாத்திரம் பணிக்கப்பட்டது ஏன்?
வன்முறையில் ஈடுபட்ட இனவாதக் கும்பல் ஆயுதமும் கையுமாக சுதந்திரமாக நடமாடுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தாமல் பொலிஸார் அசமந்தப் போக்குடன் செயற்பட்டது ஏன்? (அளுத்கமவில் மாத்திரமின்றி வேறு இடங்களிலும்)
வெள்ளிக்கிழமை அசம்பாவிதம் தொடர்பாக குறித்த பிக்கு தாக்குதலுக்குள்ளாகி உள்ளார் என்றோ அல்லது இல்லை என்றோ பதிவு செய்யப்பட்ட மருத்துவர் ஒருவரிடம் பெற்ற எந்தவொரு மருத்துவச் சான்றிதழும் சமர்ப்பிக்கப்படவில்லை. குறித்த பிக்கு உண்மையாகவே தாக்கப்பட்டுள்ளார் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நீதிமன்றில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நிலைமை இவ்வாறிருக்க பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் எந்தவொரு நிரூபிக்கப்பட்ட ஆதாரமுமின்றி, தான்தோன்றித்தனமாக பௌத்த பிக்கு குறித்த முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டார் என்று ஊடகங்களில் பதிவு செய்தது ஏன்?
நாட்டில் ஏற்பட்ட இனவன்முறைக்கான நியாயத் தீர்ப்பு வழங்கப்பட்டு அதனால் இன்னும் பல வன்முறைகள் வெடிக்குமாயின் அவற்றிற்கு பொறுப்புக் கூற வேண்டிய தார்மீகக் கடமை பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் அவர்களையே சாரும். அவரின் கீழ்க்கண்ட பொறுப்பற்ற ஊடகப் பதிவே மூல காரணமாகும். “முச்சக்கர வாகனத்தில் வந்த மூன்று முஸ்லிம் நபர்களால் பிக்குவும் அவரது வாகனச் சாரதியும் தாக்கப்பட்டுள்ளார்கள். தாக்குதலுக்குள்ளான பிக்கு இரண்டு நாட்கள் வைத்தியசாலையில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று பின் விகாரைக்குத் திரும்பும் வழியிலேயே இவ்வன்முறை வெடித்துள்ளது.”
பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் அவர்கள் ஊகத்தினை உண்மைப்படுத்தி ஊடங்களில் பதிவு செய்த கூற்றானது, அவரின் செயற்றிறனற்ற பொறுப்பற்ற தன்மைக்குத் தக்கதொரு சான்றாகும். உண்மைக்குச் சிறிது செப்பனிட்டு செப்பும்போது அதன் பின்விளைவுகள் பாரதூரமாக அமைகின்றன. வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட வக்கிர ஆயுதங்கள் தேவையில்லை; வாய்ச்சொல்லே போதுமானது.
நடந்தவை அனைத்திற்கும் தனி ஒரு நபரே காரணம் என்று கூறுவது சாலச் சிறந்ததல்ல எனினும், ஏற்கனவே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயில் எண்ணெய் ஊற்றி, சுள்ளிகள் கொண்டு தூபமிட்டு, கையில் நீரை வைத்துக்கொண்டு அணைக்கத் தயங்கி அசமந்தப் போக்குடன் செயற்பட்ட ஒருவரை சமூகத்திற்கு இனங்காட்டாமல் இருப்பது குற்றமே. பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். காலந்தாழ்த்தாது அவர் தனது பதவியை இராஜினாமா செய்வது சாலச் சிறந்தது.
நன்றி: The Nation ஆங்கில நாளிதழ்
-தமிழில்: ஹஸன் இக்பால் , யாழ்ப்பாணம்
0 comments

முஸ்லிம் அமைப்புகள், பௌத்தர்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தியுள்ளன: சம்பிக்க ரணவக்க -


வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்படும் பல்வேறு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளில் குழுக்கள், பௌத்தர்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தியிருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் இடதுசாரி எனக் கூறிக்கொள்ளும் நபர்கள் இலங்கையில் பௌத்த பயங்கரவாதம் இருப்பதாக கூறுகின்றனர்.
தப்லிக் ஜமாத் அமைப்பு இலங்கைக்கு சமூகத்திற்குள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.
இதற்கு சிறந்த உதாரணத்தை அண்மையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைத்த தகவல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 800 புதிய முஸ்லிம் மாணவர்களை அந்நிய மதத்தினர் மற்றும் இனத்தவருடன் பழக இந்த அமைப்பினர் தடைவிதித்து உத்தரவிட்டதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
அத்துடன் தவ்ஹித் ஜமாத் அமைப்பு பௌத்த நம்பிக்கை மற்றும் புத்த பகவானுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

0 comments

முஸ்லிம்கள் நடத்திய ஹர்த்தாலுக்கு எதிராக ஏன் சட்டத்தை பிரயோகிக்கவில்லை- ஜாதிக ஹெல உறுமய



நாடு முழுவதும் கடந்த பல தினங்களாக வீதிகளை மறித்து முஸ்லிம்கள் நடத்திய ஹர்த்தால் போராட்டத்திற்கு எதிராக நாட்டின் சட்டத்தை ஏன் செயற்படுத்தவில்லை என ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரின் கையெழுத்துடன் இந்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பௌத்த மக்கள் அமைதியான கூட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தும் போது தடை செய்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இந்த சட்டம் ஏன் முஸ்லிம்களுக்கு அமுல்படுத்தப்படுவதில்லை? அவர்களுக்கு நாட்டில் தனியான சட்டம் அமுலில் இருந்து வருகிறதா?

அளுத்கம சம்பவத்தின் பின்னர், பௌத்த மக்களும், பௌத்த அமைப்புகளும் மாவனல்லை, ருவான்வெல்லை, பதுளை, மஹியங்கனை ஆகிய பிரதேசங்களில் நடத்தவிருந்த பௌத்த கூட்டங்கள் தடை செய்யப்பட்டன.

நாட்டில் அமைதி, மத சகவாழ்வு என்பவற்றை தற்காத்து கொள்ளும் தேவையின் நிமித்தம் இந்த கூட்டங்கள் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அமைதியான நிலைமையை தற்காத்து கொள்வதற்காக முஸ்லிம், அமைப்புகள், அடிப்படைவாத குழுக்களுக்கு எதிராக ஏன் சட்டத்தை அமுல்படுத்துவதில்லை. நாட்டின் சட்டத்திற்கு மேல் ஷரியா சட்டம் அமுலில் இருப்பது இதற்கு காரணமா?

எவரை மகிழ்விப்பதற்காக பௌத்தர்களை அச்சுறுத்தி, அவர்களை ஆக்கிரமித்து முஸ்லிம் அடிப்படைவாதிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது?

முஸ்லிம்கள் ஹர்த்தாலில் ஈடுபடும் போது பௌத்தர்களை தேடி வேட்டைக்கு போகும் பொலிஸார் நாட்டுக்கு கிடைத்துள்ளனர்.

உலகம் முழுவதும் சிங்கள பௌத்தர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக சர்வதேச ஊடகங்களை பயன்படுத்தி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பொய்களை பரப்பி வரும் நிலையில், சிங்கள பௌத்தர்களின் குரல்களுக்கு இலத்திரனியல், அச்சூடகங்களில் உத்தியோகபூர்வமற்ற தடை விதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.

நாட்டின் பெரும்பான்மை பௌத்த மக்களுக்கு இவ்வாறான துயரமான நிலைமை ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் எதிர்நோக்க நேர்ந்துள்ளமை பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் சோபித தேரர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
0 comments

முஸ்லிம் தீவிரவாதிகளினால் இன்று நாட்டிற்கும் சிங்கள இனத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - கம்மன்பில



ஈழ நாட்டிற்கான போராட்டம் முடிவடைந்து இன்று முஸ்லிம் தீவிரவாதிகளுடனான போர் ஆரம்பித்துள்ளது. சிங்கள மக்களை காப்பாற்ற சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் கையாள வேண்டும் என தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமய ஹர்த்தாலை அனுஷ்டிக்க அனுமதித்தது மிகப்பெரிய தவறெனவும் குறிப்பிட்டது.

முஸ்லிம் தீவிரவாதத்தை வளர்த்து விடும் முஸ்லிம் அரசியல் தலைவர்களே அரசாங்கத்தின் முன் கண்ணீர் வடிக்கின்றனர் எனவும் அக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.


அளுத்கம சம்பவம் குறித்து முஸ்லிம் அமைச்சர்களும் மதத் தலைவர்களும் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பினை மேற்கொண்டமை தொடர்பில் வினவிய போதே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;


தனி ஈழத்திற்கான போராட்டத்தினை நாம் முறியடித்து இன்று நாட்டில் பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம். முப்பது வருடகால போராட்டத்தின் வெற்றி இன்று எமது நாட்டினை சர்வதேச அளவில் சிறந்த நாடாகவும் தீவிரவாதத்தினை அழித்த நாடாகவும் மாற்றியுள்ளது. வடக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை பறித்து சாதாரண பொது மக்களை ஆயுதம் ஏந்த வைத்து மிகக் கொடுமையான செயற்பாட்டினை அன்று விடுதலைப் புலிகள் இயக்கம் செய்தது. அதே நிலைமை இன்று முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. அப்பாவி முஸ்லிம்களை மத அடிப்படையிலும் தீவிரவாத கொள்கைகளை புகுத்தியும் போராட்ட குணம் கொண்ட aஇனமாக மாற்ற ஒரு சிலர் முயற்சிக்கின்றனர்.

முஸ்லிம் தீவிரவாதிகளினால் இன்று நாட்டிற்கும் சிங்கள இனத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேற்கத்தேய நாடுகளின் தீய சக்தியும் மத்திய கிழக்கு நாடுகளின் தீவிரவாத சக்திகளும் ஒன்றிணைந்து இலங்கையில் அமைதியை குழப்பி மக்களை சீரழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒரு செயற்பாடே அளுத்கம கலவரம். முஸ்லிம் சிங்கள மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி முழு நாட்டிலும் இனக் கலவரமொன்றினை ஏற்படுத்தவே முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சிக்கின்றனர்.

அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் தீவிரவாதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இலங்கையிலும் முஸ்லிம் போராட்ட கொள்கையினை பரப்புகின்றனர். இதன் பிரதிபலிப்பே இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் சிங்கள முரண்பாடுகள். ஒரு புறம் கலவரத்தையும் தூண்டிவிட்டு மறுபுறம் ஜனாதிபதியிடமும் பாதுகாப்பு செயலாளரிடமும் சென்று கண்ணிர் வடிக்கின்றனர்.
அளுத்கம சம்பவத்தில் முஸ்லிம்களின் தாக்குதலில் பல சிங்கள குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். ஆனால் சிங்கள மக்கள் எவரையும் ஹர்த்தால் அனுஸ்டிக்கவோ ஆர்ப்பார்ட்டம் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை. ஆனால் முஸ்லிம்களை மட்டும் ஹர்த்தால் அனுஷ்டிக்க அனுமதித்துள்ளனர். இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. முஸ்லிம்களுக்கு ஒரு சட்டத்தையும் ஏனையோருக்கு வேறு சட்டத்தையும் இந்த நாட்டில் பிரயோகிக்க முடியாது.

மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் இஸ்லாமிய சட்டத்தின்படியே செயற்படுகின்றனர். அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. அதை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளும் போது இலங்கை பௌத்த சிங்கள நாடு இங்கும் ஒரே சட்டம் அதுவும் பௌத்த சட்டமே செயற்பட வேண்டும். ஆனால் இங்கு மூவின மக்களையும் பாதுகாத்து அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதை தவறாக பயன்படுத்தி நாட்டில் மத வாதத்தையும் முஸ்லிம் தீவிரவாதத்தையும் பரப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments

அனைத்து அழிவுகளையும் முஸ்லிம்களே செய்து கொண்டனர் - அஜித் ரோஹன



பேருவளையில் இரண்டு நாட்களுக்கு முன்னா் எரியூட்டப்பட்ட முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான புத்தக நிலையத்தை அதன் உரிமையாளரே எரித்து இருப்பதாக பொலிஸ் மோப்ப நாய் கண்டு பிடித்திருக்கிறதாம்.

இப்போது முஸ்லிம்களின் இழப்புகள் எல்லாம் அவா்களே செய்து கொண்டவைதான் என்ற தொனியில் பொலிஸ் ஊடக பெருச்சாலியும், சிங்கள ஊடகங்களும் சொல்லி வருகின்றன.

பொலிஸ் ஊடக பேச்சாளா் அஜித் ரோஹன பொய் சொல்லி சொல்லி நாறிக் கொண்டிருக்கும் தனது வாய்க்கு ஒரு தோழனை சோ்த்திருக்கின்றார் அதுதான் பொலிஸ் மோப்ப நாய்.

அஜித் ரோஹனவின் வாயும் அந்த நாயும் இனி முஸ்லிம்களை என்ன பாடுபடுத்துமோ?

கண்முன்னேயே கொலை, கொள்ளை தீவைப்பில் ஈடுபட்ட காடையா்கள கைது செய்யாமல் விட்டு விட்டு, இப்போது பொலிஸ்மோப்ப நாயை வைத்து புலன் விசாரணை செய்கின்றார்களாம்.

ஆச்சர்யம் என்னவென்றால் அந்த நான்கு கால் மோப்ப நாயும் முஸ்லிம்களையே குற்றவாளிகள் என்று குறி வைத்து காட்டுகின்றதாம்.
பொலிஸ் காரா்களே! பேசாமல் இந்த புலன் விசாரணை ஞானசாரவிடம் ஒப்படைத்து விடுங்கள்.
0 comments

இனவாதத்தின் புதிய வெளியீடு





0 comments

BBS சேர்ந்தவர்களை மூன்று சட்டங்கங்களின் கீழ் கைது செய்து தண்டனைக்கு உட்படுத்த முடியும் !!



பொதுபல சேனாவைச் சேர்ந்தவர்களை மூன்று சட்டங்கங்களின் கீழ் கைது செய்து தண்டனைக்கு உட்படுத்த முடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தர்கா நகரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 40க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் அனைtரும் பாரிய பனிப்பாறை ஒன்றின் சிதைவுகளே தவிர, இந்த சம்பத்தின் சூத்திரதாரிகள் இல்லை.

இந்த சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டுள்ளர்கள் யார், யார் என்பது பொது மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அவர்களை கைது செய்ய வேண்டிய பொறுப்பு காவற்துறையினருக்கு இருக்கிறது.

சர்வதேச மத உரிமை சட்டம், பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் இலங்கை அரசியல் சட்டத்தின் 1983 ஆண்டின் திருத்தப்பட்ட மதம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்பான சட்டம் போன்று மூன்று சட்டங்களையும் பொதுபல சேனா மீறி இருக்கிறது.

இது வெளிப்படையான உண்மை. ஆகவே இந்த மூன்று சட்டங்களின் கீழும் அவர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


0 comments

இனவாதத்தினால் பாதிக்கப்பட்ட அளுத்கம மற்றும் பேருவெல மக்களுக்கான SLTJ யின் இரண்டாம் கட்ட நிவாரண பணி இன்று ஆரம்பம்.











0 comments

அநகாரிக மனோபாவம்

முஸ்லிம்களை மீண்டும் “ யூத சைலோக்களாக”க் காட்டும் முயற்சி ;
2015ல் இனக்கலவரம் வெடிக்கும் என்கிற அச்சத்தில் முஸ்லிம்கள்!
-    மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கறைபடிந்த,கறுப்பு வருடமொன்று இருக்குமென்றால், அது கசப்பான துன்பவியல் சம்பவங்கள் நிகழ்ந்தேறிய 1915 தான் என்பதை எவராலும் என்றுமே மறுக்க முடியாது
இலங்கையில் இந்த 1915 மே மாதம் 28 ல்தான் மிலேச்சத்தனமான, முஸ்லிம்களுக்கு எதிரான முதல் இனக்கலவரம் வெடித்திருந்தது.
1883 மார்ச் 25ல் பெளத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையில் ஓர் இனக்கலவரம் உசுப்பேற்றப்பட்டு,அதில் இருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தும் அக்கலவரம் குறிப்பிட்ட கொழும்பு- கொட்டாஞ்சேனை எல்லையை விட்டு வெளிப்பரவாத நிலையில்,முஸ்லிம்களுக்கு எதிரான 1915 கலவரத்தையே இலங்கையின் பாரிய முதல் இனக்கலவரமென ஆய்வாளர்கள் வர்ணிக்கிறார்கள்.
பத்து தசாப்த காலமாகியும் இன்னமும்,தொண்டைக்குழியில் சிக்கிய மீன் முள்ளாய் உறுத்தத்தான் செய்கிறது முஸ்லிம்கள் கொலைக்களம் கண்ட 1915.
வரலாற்றைப் படிக்கும்போதே நெஞ்சை அடைக்கிறது.
இத்தனை பாரதூரமான,ஈவிரக்கமற்றதோர் இனக்கலவரத்தை இதுவரைக்கும் இலங்கை கண்டிருக்கவில்லை.1983 கறுப்பு ஜூலையை விடவும் இது பயங்கரமாக இருந்ததென்பது பலர் அறியாததொன்று.
கம்பளை பள்ளிவாசலில் துவங்கிய மேற்படி 1915 இனக்கலவரம் கண்டி,கம்பளை,புத்தளம் போன்ற பகுதிகளுக்கும் மிக வேகமாகப் பரவியது.கண்டி காசல்ஹில் பள்ளிவாசலிலும் அது உக்கிரம் கொண்டமர்ந்தது.
இன்றைய இலங்கையைப் போல அப்போது இலங்கையின் பல பிரதேசங்களிலும் பெருத்த பெளத்த விகாரைகள் காணப்படவில்லை.ஆனால்,பல பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாயல்கள் அமைந்திருந்தன.
இறைச்சிக் கடைகள்,தையல் கடைகள்,தேநீர்க் கடைகள் என்று அன்றைய இலங்கையின் நகர்ப்பிதேச வர்த்தகத்துறையில் அதிகமதிகம் முஸ்லிம்களே கோலோச்சிக் கொண்டிருந்தனர்.
முக்கியமான ஆய்வாளர்களின் கருத்துப்படி (இதில் பிரதானமானவர் குமாரி ஜெயவர்தன.1931ல் பிறந்த இவர் 1955ல் அரசியல்துறையில் லண்டனில் முதுமானிப் பட்டம் பெற்ற கையோடு,1958ல் பரிஸ்டர் பட்டமும்,1964ல் இலங்கை தொழிலாளர் அமைப்பு தொடர்பில் கலாநிதிப் பட்டமும் பெற்றவர்.பல புத்தகங்களை எழுதிய சிறந்த ஆய்வாளர்.);
1880 காலப்பகுதியில் கொழும்பு,புறக்கோட்டை வர்த்தகம் 64 முஸ்லிம் வர்த்தகர்களின் கட்டுப்பாட்டிலும்,86 செட்டியார்களின் கரங்களிலும் இருந்தததாகத் தெரிய வருகிறது.
அப்போதைய முழு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரமும் ஏழு போரா முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு,அவர்கள் சொந்தமாக கப்பல்களையும் வைத்திருந்ததாகக் குறிப்பிடும் குமாரி ஜெயவர்தன,கொழும்பில் மட்டுமன்றி அப்போதைய இலங்கையின் பல பிரதேசங்களிலும் வர்த்தகத்துறையில் முஸ்லிம்களே முன்னணியில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார்.
அப்போதைய பெளத்தர்களை விடவும் முஸ்லிம்கள் வசதி மிக்கவர்களாக இருந்தார்கள் என்பதும்,சிங்களவர்கள் மிக வறுமைப்பட்டவர்களாகவும் பாதையோரங்களில் வெற்றிலை வியாபாரம் செய்பவர்களாகவும் இருந்து வந்தார்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,இன்றைய முஸ்லிம்களின் பல்துறை வளர்ச்சி வேகத்தைக் கட்டுபடுத்த அல்லது மழுங்கடிக்க இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளும் அடாவடித்த்னங்களுக்கும்,ஒடுக்கு முறைகளுக்கும் ஏற்பவே அன்றைய அப்பாவி சிங்கள சமூகம் உசுப்பேற்றப்பட்டதில்தான் 1915 இனக்கலவரம் வெடித்தது.
இந்தக் கலவரத்தில் 4075 வீடுகளும், வர்த்தக நிறுவனங்களும் கொள்ளையடிக்கப்பட்டதோடு, 350க்கும் மேற்பட்ட கடைகள் எரித்துச் சாம்பராக்கப்பட்டன.
பதினேழு பள்ளிவாயல்கள் தீக்கிரையாக்கப்பட்டு மேலும் 86 பள்ளிவாயல்கள் மீது கடுமையான தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. நான்கு பெண்கள் கற்பழிக்கப்பட்ட கொடூரத்தோடு,இக்கலவரத்தில் 25 பேர் கொல்லப்பட்டு,மேலும் 189 பேர் காயங்களுக்குள்ளானதாகவும் தெரிய வருகிறது.
முஸ்லிம்களுக்கு எதிரான இன்றைய பேரினவாதிகளைப்போல அன்றைய அநகாரிக தர்மபால (1864 – 1933) போட்ட தூபம்தான் மேற்படி கலவரம் கொளுந்து விட்டெரிந்ததற்குக் காரணம் என்பது எவராலும் மறுதலிக்க முடியாதது.
முஸ்லிம்களை யூத சைலொக்கள் என்றும்,இந்தியாவில் இருந்து வந்த இந்த முஸ்லிம்கள் அப்பாவி சிங்களவர்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து வசதியான ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகவும் மேற்படி 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய பெளத்த அடிப்படைவாதி பிரசாரம் செய்ததிலேயே அப்போதைய சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள்.
தற்போதைய ரோயல் கல்லூரியான அப்போதைய கொழும்பு அகடமியில் கல்வி கற்ற இந்த ஹேவாவித்தாரன பிறகொரு சந்தர்ப்பத்திலேயே தனது பெயரை அநகாரிக தர்மபால என்று மாற்றிக்கொண்டார்.தர்மபால என்றால் ‘தர்ம தேசத்தின் காவலர்’ என்றும்,அந்காரிக என்றால் ;இருப்பிடம் துறந்தவர்’ என்றும் அர்த்தம்.
பெளத்த மத எழுச்சியை உயிர் மூச்சாகக் கொண்டிருந்த இவரது மனோபாவமே மேற்படி 1915 கலவரத்திற்கு வித்திட்டதெனலாம்..
இதே மனோபாவத்திற்கு உட்பட்ட அமைப்புகளாகத்தான் இன்றைய பொதுபல சேனாவும்,சிங்கள ராவயவும் அரிதாரம் பூசிக்கொண்டுள்ளன. இந்த அமைப்பு சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அரசியல்வாதிகளின் அங்கீகாரமும்,வசதிகளும் முஸ்லிம்களின் நிகழ்கால நியாயபூர்வ அச்சத்தை மேலும் ஒருபடி அதிகரிக்கச் செய்திருக்கின்றன.
ஹலால் விவகாரம் தொட்டு இன்று இவர்கள் முஸ்லிம்களை அடி வேரறுக்கப் பகிரங்கமாகப் புறப்பட்டிருப்பதிலும் சரி, நிஜ யுத்தத்தை விடக் கொடூரமான மவுன யுத்தத்தின் ரகசியத் திட்டமிடுதல்களிலும் சரி….சகலமும் அறிந்த அரசு மவுனமாகவும் பொறுப்புக் கூறாமலும் இருப்பதில் இந்த ஐயப்பாடு பன்மடங்குகளாகவே அதிகரிக்கிறது.
முதலாம் உலகப் போர்ச் சூழ்நிலை காரணமாக, குறித்த 1915 கலவரம் பெரும் அழிவுகளைக் கொண்டு வருவதற்குள் அப்போதைய அதிகாரத்தில் இருந்த பிரித்தானியா அதை அடக்கியது.
ஆனால்,இன்றோ அடக்க வேண்டிய அதிகாரம் படைத்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய நிலையே தொடர்வதில், முஸ்லிம்களின் இருப்பும்,வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகவே இருந்து கொண்டிருக்கிறது.
மாவனல்லை,பதுளை,ஹொரதொடுவ,தர்காநகர்,அளுத்கம,கன்னத்தோட்டை பேருவளை தெஹிவளை,மொரட்டுவ,நாரம்மல என நாளுக்கு நாள் பேரினவாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் பிரதேசங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
முஸ்லிம்களின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது…. .பள்ளிவாயல்கள் தாக்கப்படுகின்றன…..அருவெறுப்பான வார்த்தைகளால் இஸ்லாமிய மார்க்கம் நிந்திக்கப்படுகிறது……குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து லாவகமாக என்றில்லாமல் மிக இயல்பாகத் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்..….
‘ இனிவரும் காலம் பயங்கரமாக இருக்கும் ‘ என ஒருபோது  விமல் வீரவன்ச தெரிவித்ததிலும் சரி… ‘ இது முற்றுப்புள்ளியல்ல….இதுதான் துவக்கம்…’ என அளுத்கம தாக்குதலுக்குப் பிறகு ஞானசாரர் வீறாய்ப்பாகப் பேசியதிலும் சரி…
முஸ்லிம்களுக்கு எதிரான சதிகள் மிக லாவன்யமான முறையில் ஏலவே திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
எப்படியோ முஸ்லிம்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஆரோக்கியமான சூழலை இழந்து கொண்டிருக்கின்றோம்.
இந்நிலைமை தொடர்ந்து,
மீளவும் இலங்கை வாழ் முஸ்லிம்களை ‘ யூத சைலொக்களாக’க் காட்டும் முயற்சிகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இப்படி….பேரினவாதிகள் பெரும்பான்மைச் சமூகத்தை மூளைச்சலவை செய்து தம் பக்கம் ஒரு தொகையினரை இழுத்துக் கொள்ள நேரிடும் பட்சத்தில், கொடிய 1915 கலவரத்தின் நூற்றாண்டு விழாவை எதிர்வரும் 2015ல் அவர்கள் நமது முஸ்லிம்களின் உயிர்கள் மீதும் உடைமைகள் மீதும்தான் கொண்டாட எத்தனிப்பார்கள் என்றே தோன்றுகிறது..
இதற்கான பயிற்சிக் களமாகத்தான் அவர்கள் அளுத்கமவைப் பாவித்து….அதில் வென்றும் காட்டியிருக்கிறார்கள்.

அளுத்கமவிலிருந்து தெஹிவளை  வரை….
ஓரிரவுக்குள் உக்கிரம்பெற்ற இன வன்முறை.
அளுத்கம, தர்காநகர் பிரதேசங்களில் பொது பல சேனா, சிங்கள ராவய இயக்கங்கள் ஒன்றிணைந்து  கடந்த 15ல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தன.
மேற்படி பிரதேசத்தில் இரண்டு தினங்களுக்கு முன் முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும், பெளத்த மதகுரு ஒருவரின் சாரதிக்குமிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட விவகாரம் வலுப்பெற்றிருந்ததில், குறித்த சாரதி தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதோடு, அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் கைதும் செய்யப்பட்டிருந்தார்.

எனினும் அன்றைய தினம் இரவு மேற்படி பிரதேசங்களில் காடையர்கள் சிலரால் முஸ்லிம்களுக்குச்சொந்தமான வர்த்தக நிலையங்கள் பலவும் தாக்கப்பட்டிருந்தன. மறுநாள் இப்பிரதேசங்களில் கடையடைப்பும் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் முஸ்லிம் கவன்சில் உட்பட்ட அமைப்புக்களின் தலைவர்கள் பலர்  பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயகவோடு களுத்துறை பொலிஸ் காரியாலயத்தில் சுமுக பேச்சுவார்த்தை ஒன்றிலும் ஈடுபட்டனர்.
பிரதி பொலிஸ்மா அதிபர் இச்சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேகநபர்களுக்கு எதிராக  நடவடிக்கை  எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார், ஆனாலும் குறித்த முஸ்லிம் இளைஞருக்குப் புறம்பாக வேறு எவரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை.
இதேநேரம், சம்பவத்துடன் தொடர்புபட்ட பெளத்த மதகுருவை கடந்த 15ல் ஊர்வலமாக அழைத்துச் செல்லவே பொதுபல சேனா திட்டமிட்டிருந்தது. அதன்படியே சக அமைப்புகளோடு மேற்படி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடும் செய்திருந்தது.
இவ்வார்ப்பட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு பலதரப்பினரும் பாதுகாப்பு வட்டாரங்களை கோரியிருந்தபோதும் அது பலனளிக்கவில்லை.
மாறாக விசேட அதிரடிப் படையினரும் அங்கு கொண்டுபோய்க் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 15 ஆம் திகதி மதியம் ஆரம்பமான இந்த இனவாத ஆர்ப்பாட்டம் மாலையில் நிறைவெய்தி சகலரும் கலைந்துபோகும் நேரத்திலேயே குண்டர்கள் கல்வீசி கலகத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
பொலிஸார் கண்ணீர்ப் புகை பிரயோகித்து, ஊரடங்கு  சட்டமும் அமுல் படுத்தப்பட்ட பிறகுதான் மேற்படி குண்டர்களின் தாக்குதல் உக்கிரம் பெற்றுள்ளதுமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
இரவு தாண்டி அதிகாலை 3 மணிவரைக்கும் மேற்படி முஸ்லிம் பிரதேசங்களில் அவர்களது சொத்துக்களையும், உடைமைகளையும் துவம்சம் செய்த இவர்கள், முஸ்லிம்களை மூர்க்கமாக தாக்கவும் ஆரம்பித்தனர்.
அதுவரை அங்கே நிலைகொண்டிருந்த பொலிஸார் அந்த ஊரடங்கு சட்ட நேரத்தில், குண்டர்கள் பலமான தாக்குதல்கள் முன்னெடுத்திருந்த சந்தர்ப்பத்தில், அவ்விடங்களை விட்டு மாயமாய் மறைந்திருந்தத போக்கையும் அவதானிக்க முடிந்திருந்தது.
அளுத்தகம, தர்காநகர், பேருவளை, வேல்பிடிய, துந்துவ, களுத்துறை தெஹிவளை என இக்கலகம் ஓரிரவுக்குள் பல பிரதேசங்களுக்கும் பரவியது.
இதேவேளை கண்னத்தோட்டையிலும் முஸ்லிம் பாடசாலை நிர்மாணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று பெளத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்த்தனர்.
அசம்பாவிதங்கள் நிகழ்ந்த மேற்படி பிரதேசங்களில் தலா 500 இற்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட ஊரடங்குச் சட்ட நேரத்தில் அவர்கள் சட்டத்தை தம் கைகளில் எடுத்திருந்ததை அவதானிக்கும்போது அது அதிகாரத் தரப்பினரின் மறைமுக அங்கீகாரமாக இருந்தததாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.
இக்கட்டுரையை எழுதும் தறுவாயில்,வெறித்தனமான இந்தத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டும், எழுவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும், சுமார் 80 பேர் வெட்டுண்டு காயப்பட்டும், 40 இற்கும் மேற்பட்டவர்கள் இரத்தம் தோய்ந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
100 இற்கும் மேற்பட்ட கடைகளும்  வீடுகளும் தீவைத்து எரிக்கவும் சேதத்துக்குள்ளாக்கவும் பட்டன. 02  பள்ளிவாயல்கள்  தாக்கப்பட்டதோடு பெட்ரோல் குண்டுகளும் எறியப்பட்டுள்ளன.
1500 இற்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் அனாதரவாக பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடம், மற்றும் பள்ளிவாசால்களில் தஞ்சம் புகுந்தனர்.
அமைச்சர் மற்றும் முஸ்லிம் தலைவர்களுக்கு, குறித்த கலகப் பிரதேசங்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் இருவரும் நாட்டில் இல்லாத நேரம் பார்த்தே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதில், இது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கலாம் என பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
ஆயினும்,இந்த நியாய அநியாயங்களின் தீவிரத்தையோ…சிறுபான்மையை இலக்கு வைத்து அடிக்கடி மாற்றங்களுக்குள்ளாகும் அரசாங்கத்தின்  தந்திரோபாயங்களையோ உணறும் மனோநிலையில் நம்மில் பலபேர் இல்லையென்பதுதான் துர்பாக்கியம்
எப்படியோ,முஸ்லிம் தலைமைகள் அரசின் பாதுகாவலர்களாகத்தான் தம்மைக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
” முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் தொடர்பில் விளக்குவதற்கு எவருமே முன்வரவில்லை” என்று நவநீதம்பிள்ளையே கோடிட்டுக் காட்டும் அளவில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மவுனமாகத்தான் இருந்திருக்கின்றன இருக்கின்றன.
தீக்குச்சி தீண்டாமல்…உரசாமல் தீப்பொறி பறப்பதில்லை.
நமக்கான தீக்குச்சிகளோ அச்சத்தில் நனைந்து உறைந்து கிடக்கின்றன.(நிறைவு)
0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger