வீடியோ) யாழ். யுவதியின் தற்கொலை(?); நீதிமன்றில் “ஆவியின் பெயரால்” மிரட்டிய சட்டத்தரணிகள்..


 

“ஊடகங்களிடம் கருத்துச் சொன்னால் மகளின் ஆத்மா சாந்தியடையாது” என தனது சட்டத்தரணி வி.சர்மினி தெரிவித்ததாக கொண்சிலிட்டாவின் தாயார் தெரிவித்தார்.
குருநகர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கொண்சிலிட்டா எனும் யுவதியின் வழக்கு இன்று யாழ் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது மேற்கண்டவாறு தெரிவித்ததாக இறந்த பெண்ணின் தாயாரான மேரி ஜெரோம் தெரிவித்தார்.
இவ்வழக்கின் போது வழக்காளிகள் சார்பாக சட்டத்தரணிகளான கணாதீபன், அர்ச்சுனா மற்றும் வி.சர்மினி ஆஜராகி இருந்ததுடன் எதிராளிகள் சார்பாக சட்டத்தரணி அன்டன் புனிதராஜ் ஆஜராகி வாதாடினர்.
இதன்போது எதிராளியின் சட்டத்தரணி கூட மன்றில் “இறந்த பெண்ணின் ஆவி, பொய் சொன்னால் நிம்மதியாக சாந்தியடையாது” என தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் தவணையில் வழக்கின் முக்கிய சாட்சியாக சட்ட வைத்திய அதிகாரியினை நேரடியாக மன்றிற்கு வந்து சாட்சியளிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
தவிர பெண்ணிடமிருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசியின் தரவுகளை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்கின் அடுத்த தவணை எதிர்வரும் மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வழக்கு நிறைவுற்று மன்றில் இருந்து வெளியேறிய கொண்சிலிட்டாவின் பெற்றோர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில், “தமக்கு ஆரம்பத்தில் சாதகமாக ஆஜரான சட்டத்தரணிகள் தற்போது விலகிச் செல்வதாகவும்,
வழக்கின் உண்மைத்தன்மையை மறைக்க முற்படுவதாக” சுட்டிக்காட்டி, தமது மகளிற்கு சந்தேகநபர்களான அருட்சகோதரர்களால் அனுப்பப்பட்ட புகைப்படங்களை ஊடகவியலாளரிடம் காட்டி சென்றனர்.

DSC05407
DSC05408
DSC05409
DSC05410
DSC05411
DSC05417
DSC05418
DSC05419
DSC05420
DSC05421
DSC05422
DSC05423
DSC05426
DSC05427
DSC05428
DSCF8392
DSCF8393

















Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger