இக்வான்களின் அரசியல் தலைமை கிறிஸ்தவருக்கு கொடுக்கப்பட்ட செய்தியை சிலர் திரிவுபடுத்தி எழுதுகின்றனர்.அது தற்காலிக பதவி என்று கூறி வழமையான சாக்கு போக்குகள் கூறி கட்சியின் தொண்டர்களை திருப்திப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.
கிறிஸ்தவருக்கு கொடுக்கப்பட்ட தலைமை பதவி தற்காலிக தலைமை பதவி என்பதை நாம் எங்கேயாவது மறுத்து பேசியுள்ளோமா?
நாம் வைக்காத வாதங்களை அவர்களாக வைத்து அவர்களே ஏக காலத்தில் வாதியாகவும் பிரதிவாதியாகவும் நின்று விதண்டாவாதம் செய்கின்றனர்.இவர்களின் போலி வாதங்களை காண கீழே எனது கட்டுரையை கவணமாக படியுங்கள் உண்மை புரியும்.
கிறிஸ்தவர் இக்வானிய கட்சியின் தலைவர் என்பதை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் கீழ்வறுமாறு.
ஒன்று: இக்வான்களின் கட்சியின் சட்ட யாப்பு
இரண்டு: இக்வான்களின் உயர் பீட அறிக்கை
மூன்று: இக்வான்கள் ஏற்றுகொள்ளும் மீடியா
இக்வான்களின் கட்சியின் சட்ட யாப்பு
இக்வான்களின் சட்ட யாப்பு என்ன சொல்கிறது என்பதை இவர்கள் கவனித்திருந்தால் இவ்வாறு இவர்கள் முரண்பட மாட்டார்கள்.தாங்கள் ஆதரிக்கும் ஒரு கட்சியின் யாப்பு என்ன என்பதை கூட அறியாமல் சிலர் பேசுகின்றனர்.இவர்கள் எல்லோருக்கும் மறுப்பு எழுத வேண்டிய அவசியம் நமக்கு இல்லை என்றாலும் இந்த சிறுபிள்ளைத்தனமான கருத்துகளை இக்வான்களின் மூத்த அழைப்பாளர்களும் நம்பிவிடுகின்றனர் என்பதற்காக இந்த பதிவை நாம் பதிகிறோம்.
இக்வானிய கட்சியின் யாப்பு என்ன?
طبقا للائحة الداخلية للحزب فإنه إذا حال حائل مؤقت لممارسة رئيس الحزب لمهامه فيكون أحد نواب رئيس الحزب قائما بأعمال رئيس الحزب
“கட்சியின் யாப்பு பிரகாரம் கட்சியின் தலைவர் தனது கடமையை செய்ய ஏதேனும் தற்காலிக தடை ஏற்படும் பட்சத்தில் கட்சியின் துனைத்தலைவர்களில் ஒருவர் தலைமை பொறுப்பை எடுப்பார்.”
இந்த யாப்பில் உள்ளதுதானே நடந்துள்ளது.இந்த யாப்பு அடிப்படையில்தானே துணைத்தலைவராக இருந்த கிறிஸ்தவர் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.இந்த யாப்பில் உள்ளவாருதானே எனது கட்டுரையின் தலைப்பும் இருந்தது.இக்வான்களின் யாப்பு பிரகாரம் நான் எழுதிய செய்தி உண்மையானதே.
எனவே தாம் ஆதரிக்கும் கட்சியின் யாப்பு என்ன என்பதைக்கூட அறியாமல் நாம் சொன்னதில் என்ன பிழை என்று கூட தெரியாமல் விமர்சிப்பவர்களை என்னதான் செய்ய முடியும்.அவர்களில் யாராவது யோசிப்பவர்கள் இருந்தால் யோசித்து அடையாளம் கண்டு கொள்வர்.
இக்வான்களின் உயர் பீட அறிக்கை
கிறிஸ்தவர் இக்வானிய கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார் என்ற செய்தியை நான் சொன்னது உண்மை என்பதற்கு சம்மந்தப்பட்ட இக்வான்களின் அறிக்கை மிகப்பெரும் ஆதாரமாகும்.
அறிக்கை இதுதான்.
على ذلك صدر قرار
المكتب التنفيذي بتكليف د.رفيق حبيب.رئيسا مؤقتا للحزب
"யாப்பின்
பிரகாரம் ரபீக் ஹபீபை தற்காலிக தலைவராக நியமித்து அமுலாக்க சபையின் அறிக்கை
வெளியிடப்பட்டது”
இதைத்தானே நானும் சொன்னேன்.இதில் என்ன மாற்று கருத்தை நான் சொல்லியுள்ளேன்.ஒருவரை தற்காலிக தலைவராக நியமிப்பதை மறுத்து எங்கேயாவது நான் சொல்லி இருந்தாலே அது தவறு.மாறாக தற்காலிக தலைவரை தலைவர் என்று சொல்வதில் என்ன பிழை உள்ளது?
நான் கூறியதையே இக்வான்களின் முன்னாள் அமைச்சர் அம்ர் தர்ராஸ் கூறியுள்ளார்.
அவர் கூறியது இதுதான்
وبهذا يكون المفكر
المنتسب إلى الطائفة الإنجيلية رفيق حبيب أول شخصية مسيحية تتولى منصب رئاسة حزب
إسلامي.
இதைத்தானே நானும் கூறினேன்.இதற்கு என்ன வித்தியாசமாக நான் கூறிவிட்டேன்.
இக்வான்கள் சொன்ன அடிப்படையிலே நானும் சொல்லியுள்ளேன் என்பதால் நான் சொன்னது பொய் என்றால் அது இக்வான்களையே முதலில் போய் சேரும்.
இக்வான்கள் ஏற்றுகொள்ளும் மீடியா
அல் ஜஸீரா செய்தி நிறுவனத்தை இக்வான்கள் கண்மூடி ஏற்றுகொள்வார்கள்.அவர்கள் வெளியிட்டால்தான் உண்மை என்று சொல்லும் கூட்டம்தான் அவர்கள்.அவர்கள் மீடியாவில் கூறப்பட்டதை கவனியுங்கள்.அதற்கும் நான் சொன்னதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்று.
அல் ஜஸீராகொண்டுவந்த செய்தியை இத்துடன் இணைக்கிறேன்.நான் இவர்கள் சொன்னதில் முரண்பட்டுள்ளேன் என்று இவர்களால் சொல்ல முடியுமா? http://www.aljazeera.net/news/pages/3287ba1f-d500-45d4-93d5-c2a1cbc9923e
வீண்வாதம் வைப்பதிலும் உண்மையை குழி தோண்டி புதைப்பதிலும் இவர்களைவிட வேறு எவரும் மிஞ்சிவிட மாட்டார்கள்.
உண்மையை மறைத்து பொய்யை சொல்கின்றவர்கள் இவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் கொண்டு பல கட்டுரைகள் நான் எழுதியுள்ளேன்.அவற்றை வாசிப்பவர்கள் இவர்களின் பிண்ணனி என்ன என்பதை அறிந்துகொள்வர்.
தற்காலிகம் என்பதன் விளக்கம் என்ன?
எகிப்தின் தற்காலிக ஜனாதிபதியை ஜனாதிபதி என்றுதானே உலகமே கூறுகிறது.மேலதிக விளக்கம் தேவைபபடும் பட்சத்திலே தற்காலிக என்ற சேர்க்கப்படும்.
இக்வான்களே எகிப்தின் தற்காலிக ஜனாதிபதியை கிறிஸ்தவர் என்று பொய் குற்றம் சாட்டியபோது ஜனாதிபதி என்றுதானே சொன்னனர். எகிப்தின் தற்காலிக ஜனாதிபதியை இக்வான்கள் கிறிஸ்தவ ஜனாதிபதி என்றே சொன்னர்.இக்வான்களின் தலைவருக்கு மட்டும் தற்காலிகம் என்பது வேறு பெயரோ?
நான் சொன்னதில் எந்த பிழையும் இல்லை.தற்காலிக தலைவர் என்பதை எனது முதல் கட்டுரை மறுக்கவும் இல்லை.தற்காலிக தலைவரை தலைவர் என்று சொல்வதில் பிழையும் இல்லை.இந்த அடிப்படை தெரியாமல் செய்தியை மறுத்து கட்டுரைவேறு சிலர் எழுதுவது சிறுபிள்ளைதனமானது.
அதிகபட்ச தண்டனைக்குற்றம் சுமத்தப்பட்டவர் வருவது தற்காலிகமானதா?
தலைவர் கதாதினி வரும்வரைக்கும் கிறிஸ்தவர் தலைவராக இருப்பார் என்பது மிக அபாயகரமானது.தலைவர் சிறையில் உள்ளார்.அவர் எப்போது வருவார் என்பதை அறியாதவரைக்கும் தற்காலிகமாக அவர் சிறையில் உள்ளார் அவர் வரும்வரைக்கும் கிறிஸ்தவர் தலைவராக இருப்பார் என்பது அவர் எப்போது வருவார் என்று அறிந்த பின்பே சொல்ல முடியும்.எனவே இவர்களின் தற்காலிகம் என்ற வாதத்தில் உண்மை தன்மை இல்லை என்பதை அறிய முடிகிறது.ஏமாறும் கூட்டம் இருந்தால் இந்த ஏமாற்று அரசியலை நம்பும் கூட்டம் இருக்கத்தான் செய்யும்.
இக்வான்களின் கைது செய்யப்பட தலைவர் “ஸஅத் கதாதினி” என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவருக்கெதிராக அதிகபட்ச தண்டனை கொடுக்கும் அளவுக்கு குற்றம் பதிவாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட இக்வானிய தலைவரின் பெயரை கூட சரியாக தெரியாதவர்கள் அவரை பற்றிய தகவலை சரியாக தந்துவிடுவார்களா?
இக்வான்கள் தலைவர்கள் சிறைக்கு போனால் எத்தனை வருடமும் ஆகலாம்.தற்காலிகம் என்பது காலம் வரையறுக்கப்பட்டது.ஆனால் இக்வான்கள் சொல்லும் தற்காலிகம் என்பது கதாதினி சிறையில் இருந்து வரும்வரை என்ற ஒரு நிபந்தனையாகும்.அவர் பத்து வருடம் கடந்து வந்தால் கிறிஸ்தவர் பத்துவருடம் தலைவராக இருப்பாரே.அவர் 20 வருடம் சிறையில் இருந்தால் 20 வருடம் கிறிஸ்தவர் தலைவராக இருப்பாரே.இதை தற்காலிகம் என்று சொல்லி பெருமைப்படுகிரீர்களா?இது நிரந்தர தலைவரைவிட அதிக வருடம் எடுக்கும் காலமாக கருதப்படும் நிலையும் உண்டே.உங்கள் போன்றவர்களை ஏமாற்றும் இக்வானிய தலைமையின் வழமையான அரசியல் தந்திரமே இது.
தற்காலிகம் என்ற பெயரில் அரசியல் நாடகம்
கிறிஸ்தவரை தலைவராக்கி அரசியல் நாடகம் நடத்துகின்றனர் என்பதுவே உண்மை.தற்காலிகமாவது ஒருவரை தலைவராக முஸ்லிம்கள் ஏற்றுகொள்ள முடியும் என்றால் எதற்கு எகிப்தின் தற்காலிக ஜனாதிபதி கிறிஸ்தவர் என்று பொய் சொல்லி கட்சி வளர்த்தீர்கள்?
எகிப்தின் ஜனாதிபதியாக கிறிஸ்தவர் ஒருவரை நியமித்துவிட்டனர் என்று பொய் பிரச்சாரம் செய்த இக்வான்கள் தாங்கள் தமது அரசியல் தலைவாரக தற்போது கிறிஸ்தவரை நியமித்துள்ளனர் என்று நாம் ஒரு செய்தியை வெளியிட்டோம்.
அந்த செய்தியில் இஸ்லாமிய கட்சிக்கு கிறிஸ்தவர் ஒருவர் தலைமை வகிப்பது இதுவே முதல் தடவை என்று பெருமை பட்டுக்கொண்டனர்.
அந்த செய்தியை அல் ஜஸீரா வெளியிட்டும் உள்ளது.இந்த விடயம் தெரியாமல் சிலர் கொந்தளிக்கிறனர்.
அவர் தற்காலிக தலைவர் என்றால் எகிப்தில் நீங்கள் பொய்யாக சொன்ன கிறிஸ்தவ ஜனாதிபதியும் தற்காலிக தலைவர் இல்லையா?
கிறிஸ்தவர் இக்வானிய கட்சிக்கு தலைவர் பொறுப்பு ஏற்ற செய்தியை நாம் சொன்னவுடன் கிறிஸ்தவர் தலைவராக இருக்க முடியாதா?என்று நியாயப்படுத்தி பேசிய இக்வானிய கூட்டம் இப்போது அவர் தற்காலிக தலைவராம் என்று ஆர்தல் அடைகின்றனர்.
இக்வான்கள் இஸ்ரேலுடனும் அமெரிக்கவுடனும் எதிரியாக காட்டி எவ்வாறு நட்பு பாராட்டினார்களோ எவ்வாறு கிலாபாவை கொண்டுவருவோம் என்று சொல்லி ஓட்டுகள் எடுத்து பின்னர் கிலாபா நடைமுறை சாத்தியம் அற்றது என்று பெல்டி அடித்தார்களோ அதுவே இந்த கிறிஸ்தவ தலைமை விடயத்திலும் இவர்கள் நாடகம் போடுகின்றனர்.
அஹ்மத் ஜம்ஷாத்( அல் அஸ்ஹரி BA.Hons)

Post a Comment