நாளை ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் – சிறிலங்காவுக்கு பதிலடி கொடுப்பார் நவிபிள்ளை


ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வில், சிறிலங்கா பயணம் குறித்த வாய்மொழி அறிக்கையை ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ளார்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வு நாளை தொடக்கம், வரும் 27ம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்காவில் தான் சந்தித்த மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் மற்றும் பதிலடி குறித்த விவகாரத்தை முன்னிலைப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், போருக்குப் பிந்திய நிலைமைகளை மதிப்பிடு செய்வதற்கு அனுமதித்த சிறிலங்கா அரசாங்கத்துக்கு அவர் பாராட்டும் தெரிவிப்பார்.

ஐ,நா மனிதஉரிமைகள் பேரவையில் நவநீதம்பிள்ளை நிகழ்த்தவுள்ள 4000 சொற்களைக் கொண்ட உரையில், சிறிலங்கா உள்ளிட்ட 20 நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்து விபரிக்கவுள்ளார்.

சிறிலங்கா பயணத்தை அடுத்து ஐ.நாவுக்கு அவர் சமர்ப்பிக்கவுள்ள முதலாவதும் சுருக்கமானதுமான அறிக்கை இதுவாக இருக்கும்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger