விடுதலைப்புலிகளுக்கு வாகன தேவைகளை பூர்த்தி செய்த கொழும்பு வர்த்தக நிலையம் முற்றுகை



விடுதலைப்புலிகள் போர் காலத்தில் தமது வாகன தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் வாகனங்களுக்காக உதிரிபாகங்களை கொள்வனவு செய்யவும் கொழும்பில் நடத்தி வந்த வர்த்தக நிலையம் ஒன்றை முற்றுகையிட்டப்பட்டுள்ளது.
அந்த வர்த்தக நிலையத்தின் தலைவரை பயங்கரவாத புலனாய்வு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் அரசியல் தொடர்புகளை கொண்டிருப்பவர் எனவும் அவர் கொழும்பு 14 சுகததாச விளையாட்டு அரங்கிற்கு அருகில் 5 மாடி வர்த்தக நிலையத்தை நடத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

8 பேர்ச்சஸ் நிலப்பரப்பை கொண்ட இந்த கட்டடம் புலிகளின் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த வர்ததக நிலையம் புலிகளின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான கிட்டு என்பவரின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் கூறினர்.
குறித்த வர்த்த நிலையத்தை பொலிஸார் சீல் வைத்துள்ளதாகவும் பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger