நடைபெற இருக்கும் பொதுநலவாய அரச
தலைவர்கள் மாநாட் டில் இலங்கை அரசாங்கத்தை குற்றவாளியாக நிரூபிக்கும் செயற்பாட்டிலேயே நவநீதம்பிள்ளை மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எனவே நவநீதம் பிள்ளையின் அறிக்கை அரசிற்கு மட்டும் பிரச்சினையல்ல. முழு இலங்கைக்கும்
பிரச்சினையை ஏற்படுத்துமென்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவு இலங்கைக்கு கிடைப்பதனை நவநீதம்பிள்ளையின் மூலமாக தடுத்து விடுதலைப் புலிகளின் செயற்பாட்டினை மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வரவே ஐ.நா.முயல்கின்றது எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
நவநீதம் பிள்ளையின் அறிக்கை சுயாதீனமானதாக அமையும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை. அவர் பக்கம் சார்பாகவே செயற்படுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கருத்துக்களை கேட்டால் அரசாங்கம் குற்றம் செய்ததாகத்தான் எண்ணத் தோன்றும். எனவே நவநீதம்பிள்ளையின் வருகையில் எமக்கு எவ்வித விருப்பும் இல்லை. அவர் எமது நாட்டின் அபிவிருத்தி சமாதானம் மற்றும் ஒற்றுமையினை சீர்குலைக்கவே இங்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தது.
மனித உரிமைகள் என்பது பொது நலமாக
செயற்படுத்த வேண்டியதொரு விடயம். அதை சுயநலமாக செயற்படுத்துவது எமது நாட்டிற்கே
பாதிப்பினை ஏற்படுத்தும்.
நவநீதம்பிள்ளை அமெரிக்காவினதும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினதும் கையாள். அவர் இலங்கையில் பக்கசார்பின்றி செயற்படுவார் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் மேலும்குறிப்பிட்டார்.

Post a Comment