ஆழ்கடல் பகுதிகளில் அதிக மழை; மத்திய மலையகத்தில் பலத்த காற்று / களனி ஆற்றை பயன்படுத்துவோர் மிகுந்த அவதானம் / மவுசாக்கலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

 

ஆழ்கடல் பகுதிகளில் அதிக மழை; மத்திய மலையகத்தில் பலத்த காற்று-
தென் மேற்குப் பருவக்காற்று காரணமாக மேற்கு மற்றும் தெற்கு ஆழ்கடல் பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, மத்திய மலையகத்தின் மேற்கு சரிவான பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியங்கள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
களனி ஆற்றை பயன்படுத்துவோர் மிகுந்த அவதானம்-
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையை தொடர்ந்து பெரும்பாலான நீர் தேக்கங்களில், நீர் நிரம்பி வழியும் மட்டத்தை அடைந்துள்ளன.
இந்தநிலையில், நேற்று இரவு முதல் களனி ஆற்றின் கிளையாறான மஸ்கெலியா ஓயாவில் அமைக்கப்பட்டுள்ள மவுசாக்களை நீர் தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்தில் அதிகளவான நீர் நிரம்புவதால் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக மூன்று வான் கதவுகளும் 6 அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளதாக நீர் தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்தார்.
மேலும் மழை தொடர்ந்து பெய்யுமானால் வான்கதவுளில் நீரை வெளியேற்றும் அளவை அதிகரிக்க வேண்டி வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் களனி ஆற்றினை பயன்படுத்துபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படும் படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மவுசாக்கலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு-
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையை தொடர்ந்து மலையகத்தில் காணப்படும் பெரும்பாலான நீர்த் தேக்கங்கள் நிரம்பி வழியும் மட்டத்தை அடைந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் களனி ஆற்றின் கிளையாறான மஸ்கெலியா ஓயாவில் அமைக்கப்பட்டுள்ள மவுசாக்கலை நீர்த் தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்தில் அதிகளவான நீர் நிரம்புவதால் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக மூன்று வான் கதவுகளும் 6 அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளதாக நீர்த் தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், மழை தொடர்ந்து பெய்யுமானால் வான்கதவுகளில் நீரை வெளியேற்றும் அளவை அதிகரிக்க வேண்டி வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் களனி ஆற்றினை பயன்படுத்துபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger