காணாமல் போனோர் குறித்து இலங்கை அரசிடம் கோரிக்கை-
இலங்கையில் வலுக்கட்டாயமாக காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் உடன் கண்டு பிடிக்கப்பட வேண்டும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் வலுக்கட்டாயமாக காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் உடன் கண்டு பிடிக்கப்பட வேண்டும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் அதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா. நிபுணர்குழுவொன்று வலியுறுத்தி உள்ளது. இலங்கை உட்பட பல நாடுகளில் காணாமற் போனவர்கள் தொடர்பாக ஐ.நா. நிபுணர்குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணைக்குழு இலங்கையில் காணாமற் போனவர்களின் நிலை குறித்தும் தனது தீவிர கவனத்தை செலுத்தி உள்ளது. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் அந்தக் குழு முதற்கட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இலங்கையில் வலுக்கட்டாயமாக காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவங்களின் பின்னணி விரிவாக ஆராயப்படவேண்டும். அத்துடன் இதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
காணாமற்போதல் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை பொறுப்பாளிகளாக்கித் தண்டிப்பதற்கு இவை மிக அவசியமானவை என்றும் அந்தக் குழு வலியுறுத்தி இருக்கிறது.
வலுக்கட்டாயமாக அல்லது தன்னிச்சையாக காணாமற்போனவர்கள் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழு அதன் அவசர கால செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் நியூயோர்க்கில் கூட இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த 6 மாத காலங்களில் நிகழ்ந்த 17 வலுக்கட்டாய காணாமற் போதல் சம்பவங்கள் மற்றும் இலங்கை உட்பட 25 நாடுகளில் நிகழ்ந்த வௌ;வேறு 400 காணாமற் போதல் சம்பவங்கள் தொடர்பிலும் ஐ.நா. நிபுணர்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
இக் குழுவின் தலைவரான ஒலிவர் டி.புரோவில் இது குறித்து கூறுகையில், வலுக்கட்டாயமாக காணாமற்போகச் செய்யப்ப
வடக்கில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து களமிறங்குவது தொடர்பில் ஆலோசனை-
வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து பேச்சுகள் இடம்பெறவுள்ளன.
வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து பேச்சுகள் இடம்பெறவுள்ளன.
இன்று இது தொடர்பில், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தான் சந்தித்துப் பேசவுள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு கூட்டணி குறித்து பேசுவதற்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி, கடந்த வாரம் கூறியிருந்தார்.
அண்மையில் வட மாகாணத்தின் பல பிரதேசங்களுக்கு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின்போது முஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதால் ஐந்து இடங்களில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது என்றும் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் மட்டும் ஒரு அணியாக நிற்பதன் மூலம் வட மாகாண மக்களின் நலன்களை முன்னெடுக்க முடியும் என தாங்கள் நம்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிடும் வேளையில், அச்சமூக மக்களின் வாக்குகள் சிதறும் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்துள்ளனர்.
எனினும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு வட மாகாணத்தில் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று மாகாண சபையில் இடங்களைப் பெறுவது இயலாத ஒன்று.
கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களின் நலன்களை மனதில் கொண்டு வாக்குகளை சிதறடிக்காமல் அதிக இடங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய தேவை.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆளும் கட்சியோடு சேர்ந்து போட்டியிடுவதுதான் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என நம்புகிறோம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
13ஐ திருத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிடவில்லை :அமைச்சர் தினேஸ்-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை அரசாங்கம் கைவிடமில்லை. அந்த முயற்சியிலிருந்து அரசாங்கம் பின்வாங்கவுமில்லை.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை அரசாங்கம் கைவிடமில்லை. அந்த முயற்சியிலிருந்து அரசாங்கம் பின்வாங்கவுமில்லை.
13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளின் சட்டத் தேவைகள் குறித்து அவதானமாக ஆராய்ந்துவருகின்றோம் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தில் அமைந்துள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களின் தன்மை மற்றும் அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது மேற்கொள்ளப்படவேண்டிய சட்டத் தேவைகள் என்பன தொடர்பாகவும் ஆராய்ந்துவருகின்றோம்.
உரிய நேரத்தில் தேவையான திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முயன்ற அரசாங்கம் இந்தியாவின் கோரிக்கையை அடுத்து அந்த முயற்சியை கைவிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment