(VIDEO) 11 வருடங்களில் 5 ஆயிரம் பூச்சி இனங்களை உண்ட ஆசிரியர் / குடும்ப ஆட்சியை நீடிக்கவே வெற்றி விழா -ஐக்கிய சோஷலிஸக் கட்சி


 

mahinda-01 (1)குடும்ப ஆட்சியை நீடிக்கவே வெற்றி விழா -ஐக்கிய சோஷலிஸக் கட்சி-
எதிர்வரும் 19ஆம் திகதியுடன் போர் நிறைவுக்கு வந்து நான்கு வருடங்களாகின்ற போதிலும், நாட்டில் போர் ஏற்படுவதற்குக் காரணமாகவிருந்த பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாது, அரசு மேலும் மேலும் இனவாதத்தைத் தூண்டிக் கொண்டிருக்கின்றது.
சிங்கள மக்களை மடையர்களாக்கி குடும்ப ஆட்சியைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே ராஜபக்ஷ அரசு போர் வெற்றிவிழாவை பெருமெடுப்புடன் கொண்டாடுகின்றது எனக் குற்றஞ் சாட்டும் ஐக்கிய சோஷலிஸக் கட்சி, போர் முடிவடைந்தாலும் தமிழர்களின் பிரச்சினை இன்னும் தீரவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.
அதேவேளை, ராஜபக்ஷ அரசின் இந்தக் கபடதனத்தை அறிந்து கொண்டு குடும்ப ஆட்சிக்கு எதிராக தெற்கு மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அந்தக் கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.
போர் முடிவடைந்து எதிர்வரும் 19ஆம் திகதியுடன் நான்கு வருடங்களாகின் றபோதிலும், நாட்டில் போர் ஏற்படுவதற்குக் காரணமாகவிருந்த பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாது, அரசு மேலும் மேலும் இனவாதத்தைத் தூண்டிக் கொண்டிருக்கின்றது என்று ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
போர் வெற்றிவிழாவை இம்முறையும் கொண்டாடுவதற்கு அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த சிறிதுங்க ஜயசூரிய, பிரபாகரன் இருக்கும் வரையில் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண முடியாது என அன்று காரணம் கூறிவந்த அரசு, போர் முடிவடைந்து நான்கு வருடங்களாகப் போகின்ற நிலையிலும் தமிழர்களுக்குத் தீர்வை வழங்க முன்வரவில்லை.
தமக்குத் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவையில்லை என்ற மமதையிலேயே ராஜபக்ஷ அரசு செயற்படுகின்றது. ‘குறிப்பாக, சிங்கள மக்களை மடையர்களாக்கி அவர்கள் மத்தியில் போர் மாயையைத் தோற்றுவித்து குடும்ப ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே நாட்டில் போர் வெற்றிவிழா கொண்டாடப்படுகின்றது.
நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய இந்தத் தருணத்தில் நாட்டில் இடம்பெற்ற கொடூர போரை நினைவுபடுத்துவது தகுமா? தமிழர்களுக்குக் கடந்தகால கசப்பான சம்பவங்களை இந்த போர் வெற்றிவிழா மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும். இதனால் தமிழர்கள் விரக்தியடைவர்.
அதேவேளை, இந்த அரசுக்கு எதிராக தெற்கு மக்களும் வீதியில் இறங்கிப் போராடும் காலம் உதயமாகும். அந்தக் காலம் தொலைவில் இல்லையென்றே நாம் கருதுகின்றோம்” என்றும் சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
11 வருடங்களில் 5 ஆயிரம் பூச்சி இனங்களை உண்ட ஆசிரியர்-
புதிய இங்கிலாந்தின் ரோட் தீவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 11 வருடங்களில் 5 ஆயிரம் பூச்சி இனங்களை உண்டுள்ளார்.
டேவிட் கிரேஸர் என்ற 47 வயதான ஆங்கில ஆசிரியர் ஒருவரே இந்த விநோதமான பூச்சி இனங்களை உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
தற்போது தன்னிடம் 20 இனங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் பூச்சிகள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார் டேவிட்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எனது குளிரூட்டியில் சின்னப் பசியெடுக்கும் வேளைகளில் சாப்பிட தேள், கரப்பான் பூச்சி உட்பட 12 ஆயிரம் பூச்சிகளை சேமித்து வைத்துள்ளேன்.
இது தவிர வண்டுகளையும் நான் சாப்பிடுவேன். நான் பிரபல்யமற்றவனாக இருக்கும் போது இப்பழக்கத்தினால் என்னை பலர் பைத்தியக்காரன் என்றெல்லாம் கூறினார்.
உண்மையில் சாதாரண உணவுகளை விட பூச்சி மற்றும் வண்டுகளில் அதிகளவான விட்டமின்கள் மற்றும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாகவும் சுவையானது எனவும் வாதாடுகிறார் ஆசிரியர் டேவிட்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger