(PHOTO) யாழ். பஸ் நிலையத்தில் இளம்பெண்களுடன் நையாண்டி செய்த இளைஞருக்கு தர்ம அடி!


 

0001யாழ். பஸ் நிலையத்தில் இளம்பெண்களுடன் நையாண்டி செய்த இளைஞருக்கு தர்ம அடி!
நீண்ட காலமாக யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இளம்பெண்களுடனும், பள்ளி மாணவிகள் மற்றும் தனியார் கல்வி நிலையம் செல்லும் மாணவிகளுடனும் அங்க சேஷ்டையிலும், பாலியல் ரீதியான வார்த்தைப் பிரயோகங்களும் மேற்கொண்டு வந்த நபருக்கு நேற்று தர்ம அடி கொடுக்கப்பட்டது.
இந்த நபர் பற்றி முன்னாள் யாழ்.மாநகரசபை உறுப்பினரான நிஷாந்தனிடம், பொதுமக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து ஞாயிறு 05.05.2013 மாலை 04 மணியளவில் நேரில் சென்று அவதானித்த போது , தனியார் கல்விநிலையத்துக்கு வந்த மாணவியிடம் சில்மிஷம் புரிய முற்பட்ட போது நிஷாந்தனாலும் பொதுமக்களாலும் கையும் மெய்யுமாக பிடிபட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்பு பொலிசாரால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இவரை சோதனை செய்த பொழுது இவரது காற்சட்டைப்பையினுள் ஆணுறை ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இவரைப் போல மேலும் பல ரோமியோக்கள் பற்றிய தகவல்களை மக்கள் வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் தர்ம அடி வழங்கப்படும் என்று நிஷாந்தன் தெரிவித்தார்.
யாழ். பஸ் நிலையத்தில் இளம்பெண்களுடன் நையாண்டி செய்த இளைஞருக்கு தர்ம அடி!
428659_247838828691304_1468942440_n-600x450
942986_247838878691299_986530080_n-600x450
 

அசாத் சாலி கைதுக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்- 
அசாத் சாலி கைதுசெய்யப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசியல் நடவடிக்கை ஒன்றுக்காக பயன்படுத்துதல் இலங்கையில் இடம்பெறும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தனிமனித சுதந்திரத்திற்கும் சட்டவாட்சிக்கும் முரணான ஒரு விடயம் என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் ஒருவருக்கு அரசியல் அமைப்பிற்கு அமைய அதற்கான காரணம் தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், அசாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பில் கடுமையான விமர்சங்களை வெளியிட்டுள்ளதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அவரது உடல் நிலையைக் கருத்திற் கொண்டு அவரை விடுதலை செய்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அந்தக் கடிதத்தின் மூலமாக ஜம்மியதுல் உலமா சபை கொரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, குற்றவியல் சட்ட ஏற்பாடுகள் கோவையின் 120 ஆவது சரத்து மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் இரண்டாம் விதிமுறையில் முதலாம் ‘ஊ’ உப பிரிவு சரத்தின் கீழான குற்றச்சாட்டுக்களில் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பல்வேறு தரப்பினருக்கும், மதத்தினருக்கும் இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்த்தன தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளைத் தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் அவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger