இமாலய மலைப் பிரதேசத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலுள்ள தகராற்றுக்குரிய ஓர் எல்லைப் பகுதியில் இருந்து இவ்விருநாடுகளும் தமது துருப்பினரை விலக்கிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் இவ்விருநாடுகள் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல்களை சரிசெய்யும் நோக்கில் படைகள் பின்வாங்கப்படுகின்றன.
எல்லைப் பகுதியில் உள்ள இருதரப்பு ராணுவத் தளபதிகள் இடையே ஞாயிறன்று ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
கிழக்கு லதாக் எல்லைப் பகுதியில் சீனத் துருப்புகள் எல்லை தாண்டி இந்திய நிலப்பரப்புக்குள் சுமார் 20 கிலோமீட்டர் வந்து ராணுவ முகாம் ஒன்றை அமைத்ததாக இந்தியா குற்றம்சாட்டியது.
எல்லை தாண்டி வரவிலை என்று சீனா மறுத்துவந்தது.
இவ்விருநாடுகளுக்கும் இடையில் 1962ல் நடந்த எல்லைப் பகுதி யுத்தத்தில் இந்தியா தோல்வியடைந்திருந்தது.
.jpg)
Post a Comment