தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உதறிவிட்டு தெரிவுக்குழு செல்ல தயாராகிறது UNP




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்தால் தான், தாமும் அதில் இடம்பெறுவோம் என்று கூறி வந்த ஐதேக தற்போது புதிய நிபந்தனையை விதித்துள்ளது.
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சிறிலங்கா அரசினால் முன்மொழியப்பட்டுள்ள தெரிவுக்குழுவில் ஐதேக இணைந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசதரப்பில் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நேற்று நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பின் 17வது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சுதந்திர ஆணைக்குழுக்களை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் தயாரானால், தாம் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராது போனாலும்,தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உதவும் வகையில், ஐதேக அதில் பங்கேற்கும்.
ஆனால்,சுதந்திர ஆணைக்குழுக்களை நியமிக்கும் என்பதை சிறிலங்கா அரசாங்கம் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.a
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger