19 ஆவது திருத்தத்தை பின்தள்ளியது அரசு




வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பில் கைவைத்தால் அது பொதுநலவாய மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவேதான், இவ்விரண்டு நிகழ்வுகளும் முடிவடைந்த பின்னர் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவருவது சம்பந்தமாக பரிசீலிக்கப்படவுள்ளது.
அரசமைப்பில் உடனடியாகத் திருத்தங்களை மேற்கொள்ளாதிருக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நேற்று தீர்மானித்துள்ளது என நம்பகரமாக அறியமுடிகின்றது.
இதன்படி வடமாகாணசபைத் தேர்தல், பொதுநலவாய மாநாடு ஆகியன முடிவடைந்த பின்னரே அரசமைப்பில் மாற்றம் கொண்டு வருவது சம்பந்தமாக அரசு பரிசீலிக்கவுள்ளது.
வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பில் சிற்சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசு முன்னதாகத் தீர்மானித்திருந்த போதிலும் பல மட்டங்களிலிருந்தும் கிடைக் கப்பெற்ற ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டே அந்த நடவடிக்கை தற் போது பிற்போடப்பட்டுள்ளது.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்திலுள்ள முக்கிய அதிகாரங்களான பொலிஸ், காணி அதிகாரங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கும், பிரதம நீதியரசர் பதவிக்காலத்தை 5 வருடங்களுக்கு வரையறுப்பதற்கும் ஜனாதிபதியின் பதவி தவணைக் காலத்தை மூன்று தடவைகளாக நீடிப்பதற்காகவுமே அரசமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படவிருந்தது.
இவையாவும் அரசமைப்பின் 19 ஆவது திருத்தமாகக் கொண்டு வரப்படவிருந்தன.
தற்காலிகமாக இந்த மாற் றங்கள் நிறுத்திவைக்கப் பட்டிருந்தாலும் 2013ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் அரசமைப்பு நிச் சயம் மாற்றியமைக்கப் படவுள்ளது.

போக்குவரத்து விதிமுறை அதிகாரத்தைத் தவிர ஏனைய பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதுடன் காணி அதிகாரங்களும் மத்திய மாகாண சபைகளிடமிருந்து முழுமையாகப் பறிக்கப்படவுள்ளன.
“வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பில் கைவைத்தால் அது பொதுநலவாய மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவேதான், இவ்விரண்டு நிகழ்வுகளும் முடிவடைந்த பின்னர் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவருவது சம்பந்தமாக பரிசீலிக்கவுள்ளோம்” என அரசதரப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger