கடந்த மார்ச் மாதம் ஆடை ஏற்றுமதி சற்று அதிகரித்த போதிலும், சிறிலங்காவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாய் சரிவை சந்தித்துள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில், கடந்த ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், சிறிலங்காவின் இந்த ஆண்டின் மார்ச் மாத ஏற்றுமதி 2.8 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தை விட இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆடை ஏற்றுமதி 0.5 வீதத்தினாலும், விவசாயப் பொருள் ஏற்றுமதி 0.5 வீதத்தினாலும், தேயிலை ஏற்றுமதி 1.9 வீதத்தினாலும் அதிகரித்துள்ளது.
எனினும் இறப்பர் பொருட்களின் ஏற்றுமதி வருவாய் 9.4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் சிறிலங்காவின் இறக்குமதியும் 16.8 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
இதற்கிடையே, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சிறிலங்காவின் ஏற்றுமதி 8.1 வீதத்தினாலும், இறக்குமதி 16 வீதத்தினாலும் குறைவடைந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Post a Comment