சார்ஜா போலீஸின் இந்த ஆபரேஷனுக்கு அல்-ரஷீத் (Al Rased) என்று பெயரிடப்பட்டுள்ளது. அரபிக்கில் அதன் அர்த்தம் – ‘அவதானிப்பவர்’.
இந்த ஆபரேஷன் தொடர்பாக சார்ஜா போலீஸ் போக்குவரத்து பிரிவின் டைரக்டர் லெப். கர்னல் அஹ்மத் பின் தர்விஷ், “உங்கள் கார்களின் இஞ்சினை நிறுத்தாமல் செல்லாதீர்கள். அப்படிச் சென்றால், சார்ஜாவில் பல இடங்களில் உங்கள் கார்கள் திருடர்களால், அல்லது போலீசால் திருடப்படும்” என்கிறார் சிரிப்புடன்.
சார்ஜா போலீஸ் போக்குவரத்து பிரிவு இதற்காக டீம் ஒன்றை அமைத்துள்ளது. அவர்கள், நகரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் யூனிபார்ம் இல்லாமல் நிறுத்தப்படுவார்கள். சார்ஜாவில் பேங்குகள், மற்றும் பார்மசிகளுக்கு முன்னால்தான் பெரும்பாலும் கார்களை பார்க் செய்து இஞ்சினை ஓடவிட்ட நிலையில் செல்கிறார்கள்.
யாராவது காரை பார்க் பண்ணி இஞ்சினை ஓடவிட்ட நிலையில் சென்றால், அந்த நபரில் தலை மறைந்தபின் போலீஸ் டீம் காரை மறைவிடம் ஒன்றுக்கு எடுத்து சென்று விடுவார்கள்.
அதன்பின் அந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம், கார் உரிமையாளர் திரும்பி வந்து காரை காணவில்லை என்று எப்படி ரியாக்ட் செய்கிறார் என்று பார்ப்பார்கள்.
அஹ்மத் பின் தர்விஷ், “கார் உரிமையாளர்கள் தமது கார்கள் திருடப்பட்டது என்று அறிந்து திடுக்குற வேண்டும். அங்கும் இங்கும் தேட வேண்டும். அதுதான் அவர்களுக்கு நாம் புகட்டும் பாடம்.
கார் உரிமையாளர்கள் அவ்வாறு பதைபதைத்த பின், கார் திருப்பி கொடுக்கப்படும். அந்த அனுபவம் ஒன்றே போதும், அதன்பின் காரை கவனமின்றி விட்டுச் செல்ல மாட்டார்கள். அதுதான், ஆபரேஷன் அல்-ரஷீத்” என்கிறார்.
இந்த ஆபரேஷன் ஏற்கனவே சார்ஜாவில் நேற்று முதல் ஆரம்பித்து விட்டது!
ஆமா.. காரை நிறுத்திவிட்டு சென்ற நபரே, கார் திருடனாக இருந்துவிட்டால், என்னாகும்? நம்மைவிட கில்லாடி திருடனும் இருக்கிறான் என்று நினைத்தபடி அடுத்த காரை தேடி போய்விடக்கூடும்… இல்லையா?

Post a Comment