மாத்தளை மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் சத்திய வாக்கு மூல மனு அளித்த 13 பேரிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த நடவடிக்கைகளை இரகசிய பொலிஸார் இன்று (14) ஆரம்பித்துள்ளனர்.
மாத்தளை மனித புதைக்குழி தொடர்பான வழக்கு மாத்தளை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுதாரர்கள் 13 பேர் கடந்த 8ம் திகதி சத்திய வாக்கு மூல மனு அளித்தனர்.
88-89 காலங்களில் காணாமல் போன தமது உறவினர்களின் எலும்புக்கூடுகள் மாத்தளை மனித புதைக்குழியில் இருப்பதாக மனுதாரர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.
குறித்த 13 பேரையும் மனு பிரதிவாதிகளாக ஏற்றுக் கொள்ள மாத்தளை நீதவான் இணக்கம் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த 13 பேரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு இரகசிய பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கைகளை மே 30ம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும் நீதவான் பணித்தார்.

Post a Comment