-PHOTOS- ‘லயன் எயார்’; கறுப்புப் பெட்டி இன்னும் இல்லை; தங்கப் பல்லும் கண்டுபிடிப்பு- (இணைப்பு-2)



 / வெட்டிய மரத்திற்குள் நசுங்குண்டு பொலிஸ் உத்தியோகத்தர் பலி / சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

air-003‘லயன் எயார்’; கறுப்புப் பெட்டி இன்னும் இல்லை; தங்கப் பல்லும் கண்டுபிடிப்பு-(இணைப்பு-2)
14 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் ‘லயன் எயார் – அன்டனோவ் 24′ ரக உள்ளூர் பயணிகள் விமானத்தின் சிதைவடைந்த பகுதிகளுடன் மனித எலும்புக்கூடுகள், ஆடைகள், செருப்புகள், இதயத்துடிப்புமானி மற்றும் தங்கப் பல் ஒன்றின் ஒரு பகுதி போன்றன மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, மேற்படி விமானத்தின் கறுப்புப் பெட்டி இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நம்பப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
சுழியோடிகள், கடலுக்கு அடியில் சுமார் 30 அடி ஆழத்தில் இருந்து மேற்படி விமானத்தின் பாகங்களை மீட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
வெட்டிய மரத்திற்குள் நசுங்குண்டு பொலிஸ் உத்தியோகத்தர் பலி-
வீட்டுத் தோட்டத்தில் மரம் வெட்டிக் கொண்டிருந்த போது வெட்டிய மரத்திற்குள் நசுங்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். குட்டிகல பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி எம்பிலிபிட்டிய துன்கம பகுதியில் நேற்றுமாலை இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த 42 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு-
நீர்கொழும்பு, ஐh-எல பகுதியில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நிலையமொன்று சுற்றிவளைக்கப் பட்டதுடன் அங்கிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலிருந்த 40 கொள்கலன்களையும் வாகனமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த பிரதான சந்தேகநபர் அநுராதபுரம் -ஹொரோவபொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-PHOTOS- விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட’லயன் எயார்’; கறுப்புப் பெட்டி இன்னும் இல்லை; தங்கப் பல்லும் கண்டுபிடிப்பு….

 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger