கைதியுடன் ‘கலந்த’ பெண் ஜெயில் காவலர்கள்… 4 பேர் கர்ப்பம்! / பள்ளியில் சகோதரியிடம் பேசிய மாணவனை கொலை செய்த கொடூர அண்ணன்!


 

கைதியுடன் ‘கலந்த’ பெண் ஜெயில் காவலர்கள்… 4 பேர் கர்ப்பம்!-
பால்டிமோர் சிட்டி: அமெரிக்காவின் பால்டிமோர் சிட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல் கைதிகளுக்கு உதவி புரிந்து அவர்களுடன் சல்லாபமும் கொண்டு கர்ப்பமும் ஆகியுள்ளனர் நான்கு பெண் காவலர்கள். இவர்கள் உள்பட மொத்தம் 13 பெண் காவலர்கள், கைதிகளுக்கு உதவியதாக பிடிபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பால்டிமோர் சிறையில் போதைப் பொருள் கடத்தல் கைதிகள் நிறையப் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த சிறையில் பெண் காவலர்கள் அதிகம். இவர்களில் பலர் கைதிகளுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு அவர்களுக்கு பல உதவிகளைச் செய்வதாக ஏராளமான புகார்கள் குவிந்தன. இதையடுத்து அதிகாரிகள் ரகசியக் கண்காணிப்பை முடுக்கி விட்டனர்.
இதில் 630 பெண் காவலர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு கைதிகளுக்கான நேரடி காவல் பணி மறுக்கப்பட்டு வேறு பணிகள் தரப்பட்டன.
இவர்களில் 13 பேர் மீது தற்போது கடுமையான குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன. அதாவது இவர்கள் போதைப் பொருள் கைதிகளுடன் செக்ஸ் உறவு வைத்திருந்தனர் என்பதே அந்தப் புகாராகும். அவர்களில் நான்கு பேர் ஒரு கைதியுடன் உறவு கொண்டு குழந்தைகளையும் பெற்றுள்ளனர் என்பது இன்னொரு பரபரப்பாகும்.
இந்த 13 பெண்களும், தங்களுடன் நட்பு கொண்டிருந்த கைதிகளுக்கு செல்போன்கள், போதைப் பொருட்களை கடத்திக் கொண்டு வர உதவியுள்ளனராம்.
விரைவில் குற்றச்சாட்டுக்குள்ளானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாம்.
பள்ளியில் சகோதரியிடம் பேசிய மாணவனை கொலை செய்த கொடூர அண்ணன்!!-
தென் ஆப்ரிக்காவில் பள்ளியில் உடன் படிக்கும் மாணவியிடம் பேசியதால் இந்திய வம்சாவளி மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென் ஆப்ரிக்கா டர்பன் நகரை சேர்ந்த ஜெய்சி மூட்லே என்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது மகன் தரேஷன் மூட்லே(16) அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளான்.
பள்ளியில் ஓய்வு நேரத்தில் உடன் படிக்கும் மற்றொரு மாணவியிடம் பேசியுள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவியின் சகோதரன், தரேஷனை கத்தியை காட்டி மிரட்டியும், தாக்கி உள்ளான்.
இதனால் அங்கு பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. மாணவன் கத்தியுடன் பள்ளிக்கு வந்தது எப்படி என்ற சர்ச்சையும் எழுந்தது. இதுதொடர்பாக தரேஷனை தாக்கிய மாணவனிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
பின்னர் தரேஷன் மற்றும் அவனது தம்பி இருவரும் வீட்டுக்கு செல்லும் போது ஒரு கும்பல் இருவரையும் வழிமறித்து தாக்கியது. இதில் தரேஷன் குத்தி கொலை செய்யப்பட்டான். அவனது தம்பிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தரேஷன் அப்பா ஊடகத்தினரிடம் கூறுகையில், பள்ளியில் உடன் படிக்கும் மாணவியிடம் பேசியதற்காக எனது மகனை கொலை செய்து விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வடக்கு டர்பனில் 2 மாணவர்கள் கத்தியால் குத்தப்பட்டனர். பள்ளிக்கு மாணவர்கள் கத்தியுடன் வருவது, மாணவர்களை மர்ம கும்பல் தாக்குவது, கொலை செய்வது உள்ளிட்ட சம்பவம் தென் ஆப்ரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger