கடத்தப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு கடத்தியவரே தந்தை / விமல் வீரவன்ச அரசிலிருந்து விலக வேண்டுமென ஐ.தே.கட்சி தெரிவிப்பு


 

6573கடத்தப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு கடத்தியவரே தந்தை-
அமெரிக்காவின் ஒஹியோ மாநிலதில் காணாமல் போயிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் குழந்தைக்கு அவரை சிறை வைத்திருந்த ஏரியல் காஷ்ரோவே தந்தை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் ஒரு தசாப்தமாக மூன்று பெண்களை சிறை வைத்தாக ஏரியல் காஷ்ரோ மீது குற்றம் சுமத்தப்படுள்ளது.
அத்துடன் அவர்களை கடத்தியதாகவும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்படுள்ளன.
இந்நிலையில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் ஆறு வயது குழந்தைக்கு ஏரியல் காஸ்ரோவே தந்தை என டீ.என்.ஏ பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.
சிறை வைத்திருந்த பெண்களை கட்டாய கருச்சிதைவுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் கொலைக் குற்றச்சாட்டினை பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஒஹியோ மாநில சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச அரசிலிருந்து விலக வேண்டுமென ஐ.தே.கட்சி தெரிவிப்பு-
வடக்கில் மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால், அமைச்சர் விமல் வீரவன்ச அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஐ.தே.கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் நீக்கப்படாமல் வடக்கில் தேர்தல் நடத்தப்பட கூடாது என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்தினுள்ளேயே மாறுப்பட்ட நிலைபாடுகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் வடக்கில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால், உண்மையான வீரனாக அமைச்சர் விமல் வீரவன்ச பதவி விலகுவாரா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்?
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger