துருக்கி கார் குண்டு வெடிப்பில் 18 பேர் பலி / பூமியின் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிப்பு


 

newsblastதுருக்கி கார் குண்டு வெடிப்பில் 18 பேர் பலி-
உள்நாட்டு சண்டை நடைபெற்று வரும் சிரியாவிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் துருக்கி வருகின்றனர். அவர்களுடன் போராளிகளும் செல்வதாகவும், அவர்களுக்கு துருக்கி ஆதரவு அளிப்பதாகவும், சிரியா குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், துருக்கி நாட்டின் சிரியா எல்லையோரம் அமைந்துள்ள ரெய்ஹான்லி நகரில் இன்று மாலை கார் குண்டுகள் வெடித்தன. நகரின் சிட்டி ஹால் மற்றும் போஸ்ட் ஆபிஸ் அருகே 4 இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த சில மாதங்களாக இப்பகுதி தாக்குதலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது. சிரியாவில் இருந்து வரும் போராளிகளுக்கு ஆதரவு அளித்து வருவதால், துருக்கி அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பை அடுத்து சிரியாவிலிருந்து வந்த கார்களையும், மக்களையும் அங்குள்ளவர்கள் அடித்து நொறுக்கினர்.
பூமியின் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிப்பு-
மனித வரலாற்றில் முதல் தடவையாக பூமியின் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அரசாங்கத்தின் ஹவாய்யிலுள்ள ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட நாளாந்த அளவீடுகளின் பிரகாரம் முதல் முறையாக காபனீரொட்சைட் 400 PPஆ அளவை எட்டியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
3 தொடக்கம் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே காபனீரொட்சைட் 400 PPஆ அளவை விட அதிகமாக காணப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வானிலையும் குறிப்பிடத்தக்களவில் வெப்பமானதாக இருக்கும் என அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அண்மைய தசாப்தங்களில் பூகோள வெப்ப உயர்வை ஏற்படுத்தும் வாயுக்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக காபனீரொக்சைட் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger