சவுதி, இலங்கை அதிகாரிகளுக்கிடையில் பேச்சு / தமிழ் சகோதரர்களுடன் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்வது அவசியம் -ஞானசார தேரர்



 

pikku.pothipalasenaதமிழ் சகோதரர்களுடன் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்வது அவசியம் -ஞானசார தேரர்-
புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காகவே, தாம் உள்ளிட்ட பிக்குகள், வெளிநாடு சென்றதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நோர்வே பிரஜை ஒருவரின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயத்தை மேற்கொண்டதாகவும் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமது அமைப்புக்கு பெரும் தேவை இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் முழுமையான அறிவுறுத்தல்களுடனேயே தமது அமைப்பின் பிக்குமார் அமெரிக்காவுக்கு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு வெளியில் நாட்டை நேசிக்கும் தேசப்பற்றாளர்கள் இருப்பதாகவும் துரதிஷ்டவசமாக அவர்கள் இலங்கை சமூகத்திற்குள் இல்லை எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
போரில் வெற்றியோ தோல்வியோ இல்லை என்பதால், தமிழ் சகோதரர்களுடன் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் தேவை தமக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் முதல் நாட்டில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் ஜெனிவாவுக்கு சென்றும் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அது ஜனநாயக உரிமை எனவும் தேரர் கூறியுள்ளார்.
சவுதி இலங்கை அதிகாரிகளுக்கிடையில் பேச்சு- 
சட்டவிரோத பணியாளர்கள் தொடர்பில் சவுதி அரேபியா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் இன்று விசேட பேச்சுவார்ததையொன்று நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபிய தொழில் அமைச்சில் நடைபெறவுள்ளதாக அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதரகத்தின் முதன்மை அமைச்சு ஆலோசகர் அனுர முத்துமால தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர், ஜித்தாவிலுள்ள கொன்சியூலர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின் போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக ரியாத்திலுள்ள சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதரகத்தின் முதன்மை அமைச்சு ஆலோசகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக பத்தாயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் தங்கியுள்ளதாக இலங்கைத் தரப்பு தெரிவித்துள்ளது.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger