1800 பொதுமக்களை கொல்ல உத்தரவிட்டவருக்கு 80 வருட சிறை / ஈரானில் பூமியதிர்ச்சி, 70க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சேதம்


 

1138637674801800 பொதுமக்களை கொல்ல உத்தரவிட்டவருக்கு 80 வருட சிறை 
குவாத்தமாலாவின் இரத்தக்களரியுடனான உள்நாட்டுப் போரின்போது அந்நாட்டுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் எஃப்ரைன் றியோஸ் மொண்ட்டிற்கு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 80 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
1980களின் முற்பகுதிகளில், தனது ஆட்சிக்காலத்தின் போது, லிக்ஸ்ஸின் மாயா இனக்குழுவைச் சேர்ந்த 1800 பேரை கொல்வதற்கு உத்தரவிட்டதாக ஜெனரல் றியோஸ் மொண்ட் அவர்களை அங்குள்ள நீதிமன்றம் ஒன்று குற்றஙங் கண்டுள்ளது.
அவரது தலைமையின் கீழ் இருந்த இராணுவம், பழங்குடியின மக்கள் இடதுசாரி கெரில்லாக்களுக்கு உதவியதான சந்தேகத்தின் அவர்களுக்கு தண்டனையாக பரவலான வன்முறைகள், பாலியல் வல்லுறவுகள், பட்டினி போடுதல் ஆகியவற்றை மேற்கொண்டதாக நீதிபதி கூறியுள்ளார்.
தனது சொந்த நாட்டிலேயே இனப்படுகொலையைச் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட முதலாவது முன்னாள் தலைவர் இவராவார்.
ஈரானில் பூமியதிர்ச்சி, 70க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சேதம்-
ஈரானின் தெற்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த பூமியதிர்ச்சியில் 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேதமடைந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு ஈரானிலுள்ள மினாப் நகரிலிருந்து 85 கி.மீற்றர் தூரத்தில் பூமியின் மேற்பரப்பிலிருந்து 36.44 கி.மீற்றர் ஆழத்தில் 6.2 ரிச்டர் அளவில் இப்பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் 70 மேற்பட்ட கிராமங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை உயிரிழப்பு தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
ஈரானில் கடந்த மாதம் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த பூமியதிர்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் உயிரழந்ததுடன் பாரிய சேதங்களும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger