பதினான்கு வயது சிறுமியை பாலியல்: வல்லுறவு புரிய உடந்தையாகவிருந்த தாய்-
பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த பதினான்கு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இளைஞனுக்கும் இதற்கு உடந்தையாகவிருந்த இளைஞனின் தாயாருக்கும் கம்பளை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கி இருவரையும் விடுதலை செய்துள்ளது.

14 வயது சிறுமி ஒருவரை அழைத்து வந்த கம்பளை பகுதியைச் சேர்ந்த மேற்படி தாய் வீட்டின் அறையொன்றில் தனது மகனுடன் இரவில் தனித்திருக்கச் செய்துள்ளார்.
இரவு கழிந்து மறுநாள் குறித்த சிறுமியை பாட்டியிடம் ஒப்படைத்த போது விடியமறிந்து முரண்பட்ட பாட்டி தனது பேத்தியை ஏற்க மறுத்ததுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் குறித்து தாயும் மகனும் கைது செய்யப்பட்டு கம்பளை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
நீதிவான் நளீன் பிரசாத் டி.அல்விஸ் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். இதேவேளை குற்றச்சாட்டு தொடர்பில் கிடைக்கப் பெற்ற வைத்தியப் பரிசோதனை அறிக்கையிலும் சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் தாயாரை 10 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையிலும் மகனுக்கு 25 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையிலும் ரொக்கப்பிணையில் விடுதலை செய்து விசாரணைகளை ஒத்திவைத்தார்.
யாழில் இந்திய பிரஜை கைது-
சட்டவிரோதமாக புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் 29 வயதான இந்திய பிரஜை ஒருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் 29 வயதான இந்திய பிரஜை ஒருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இவர் 77 சாறிகளையூம் 78 பஞ்சாபி ஆடைகளையூம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சந்தேகநபரின் விஸா காலவதியான நிலையில் குடிவரவூச் சட்டங்களை மீறியூள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவூள்ளார்.
தொட்டிலில் விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி பலி-
திருகோணமலை, கிண்ணியா, கட்டையாற்று பிரதேசத்தில் தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் ஒருவன் இன்று (16) உயிரிழந்துள்ளான்.
திருகோணமலை, கிண்ணியா, கட்டையாற்று பிரதேசத்தில் தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் ஒருவன் இன்று (16) உயிரிழந்துள்ளான்.
பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் ஜிப்ரி அகீல் (வயது 10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சிறுவனின் தாய் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் செய்து வருவதாலும் தந்தை கொழும்பிலுள்ள கடையொன்றில் தொழில் செய்து வருவதாலும் அம்மம்மாவின் பராமரிப்பிலேயே இச்சிறுவன் இருந்து வந்துள்ளான்.
இது தொடர்பான விசாரணையை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment