சாவகச்சேரி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில், கெப் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டுவில் தெற்கைச் சேர்ந்த 67 வயதான நபரொருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கெப் வாகனத்தின் சாரதி, இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஒரே தடவையில் தலா மூன்று சிசுக்களை பிரசவித்த இரு தாய்மார்-
ஒரே தடவையில் தலா மூன்று குழந்தைகளை இரு தாய்மார்கள் பிரசவித்த சம்பவமொன்று இன்று வெள்ளிக்கிழமை, கொழும்பு சொய்சா மகளிர் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
ஒரே தடவையில் தலா மூன்று குழந்தைகளை இரு தாய்மார்கள் பிரசவித்த சம்பவமொன்று இன்று வெள்ளிக்கிழமை, கொழும்பு சொய்சா மகளிர் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
இவர்களில் ஒரு தாயார் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இவ்விரு தாய்மாரும் மினுவன்கொட மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
.jpg)
Post a Comment