சவுதியில் கடந்த 4 மாதத்தில் 40 பேருக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!
சவுதி அரேபியாவில் கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்படுபவர்களுக்கு தலையை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றுகின்றது சவுதி அரசு.
சவுதி அரேபியாவில் கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்படுபவர்களுக்கு தலையை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றுகின்றது சவுதி அரசு.
இதற்கிணங்க இந்த ஆண்டு கடந்த 4 மாதத்தில் மட்டும் 40 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் தலையை துண்டித்தே கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை சவுதி அரேபியா உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
கணவன்மார் முறைப்பாடு, பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-
பெண்களால் நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைத்த களுத்துறை பொலிஸார் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து பெண்களையும் கைது செய்தனர்.
பெண்களால் நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைத்த களுத்துறை பொலிஸார் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து பெண்களையும் கைது செய்தனர்.
தமது எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது தமது மனைவியர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கைதான பெண்களின் கணவன்மார் களுத்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்தே களுத்துறைப் பொலிஸார் கடந்த 13ஆம் திகதி இந்த சூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
கைதான பெண்களில் பலர் பேரன், பேத்திமாரையுமுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாராளுமன்ற உறுப்புரிமை கோரிய பொன்சேகாவின் மனு விசாரணை-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு ஒன்று நேற்று (16) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு ஒன்று நேற்று (16) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சரத் பொன்சேகாவிற்கு இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு அமைய சிறைக் கைதியாக இருக்கும் போது, பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
இவ்வாறு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பானது நீதிக்கு புறம்பானது என குறிப்பிட்டு சரத் பொன்சேகா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விவாதமே இன்று இடம்பெற்றது.
இதன்போது வழக்கு விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment