'சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக்கும் வகையில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுகின்றனர்



சர்வதேசம், தேசிய ரீதியில் பௌத்தர்களை சீரழிக்கும் வகையில் சிங்களப் பெண்கள் பாலியல் ரீதியில் சீரழிக்கப்படுகின்றனர். சிங்கள பௌத்தர்களுக்கு சர்வதேச, தேசிய ரீதியில் ஆபத்துக்கள் நிகழ்கின்றன என பல வசனங்கள் குறிப்பிட்டுள்ள நிலையில் கண்டி, மடவளை பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.



ஒழுங்கமைப்பு குழு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ள இந்த துண்டுப்பிரசுரத்தில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சர்வதேசம், தேசிய ரீதியாக பௌத்த சிங்களவர்களுக்கு ஆபத்துக்கள் நிகழ்கின்றன. இதுதொடர்பான விடயங்கள் உங்களுக்கு தெரியுமா?

  • தினந்தோறும் பௌத்தர்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் காணி அந்நியர் வசமாகின்றது.
  • கிழக்கு மாகாணத்தில் பௌத்த விகாரைகளை மையமாகக் கொண்டு எமது உரிமைகள் தொடர்பாக வடிக்கப்பட்டிருந்த தகவல் வெட்டுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
  • மலையகத்தில் உள்ள சகல பிரதான நகரங்களும் அந்நியர் வசமாகின்றன.
  • எமது குடும்பங்களில் இரு பிள்ளைகளே இருகின்றனர். ஆனால் ஏனைய மதத்தினரின் குடும்பங்களில் குடம்பம் ஒன்றுக்கு 10முதல் 15 பிள்ளைகள் இருக்கின்றனர். இதனால் எமது இனத்திரின் எண்ணிக்கை குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • சர்வதேசம், தேசிய ரீதியில் பௌத்தர்களை சீரழிக்கும் வகையில் சிங்களப் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர்
    .

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger