இலங்கையர் பலவந்த நாடு கடத்தல்-
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 819 இலங்கையர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்ரேலிய இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 819 இலங்கையர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்ரேலிய இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்போரை, நாடு கடத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வோரை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 3 ஆயிரத்து 286 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளார்.
வட தாரகை மீண்டும் இயக்கம்-
யாழ். குறிகட்டுவானுக்கம் நெடுந்திவுக்கும் இடையேயான வட தாரகை கப்பல்சேவை மீண்டும் இன்றுகாலை முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ். குறிகட்டுவானுக்கம் நெடுந்திவுக்கும் இடையேயான வட தாரகை கப்பல்சேவை மீண்டும் இன்றுகாலை முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மணிக்க நயினாதீவு நாகவிகாரையின் பௌத்த பீடாதிபதியின் பிரித்தோதும் வைபவத்துடன் வட மாகாண கடற்படைகளின் கட்டளைத்தளபதி ரியல் அட்மிரர் டி.எஸ்.உடவத்த மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியவார்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று கன்னிப் பயணத்தை குறிசட்டுவான் துறைமகத்தில் இருந்து ஆரம்பித்த வடதாரகை கப்பலில் எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட பயணிகள் மிகவும் சந்தோஷமாக நெடுந்தீவுக்கான பயணத்தை மேற்கொண்டனர்.
இறக்காமம் நன்னீர் மீன் பிடியாளர்களுக்கு வாழ்வியல் பிரச்சினை-
அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதி நன்னீர் மீன்பிடியாளர்கள் பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதி நன்னீர் மீன்பிடியாளர்கள் பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இறக்காமம் குளத்தை நம்பி ஜீவனோபாயத்தை முன்னெடுக்கும் நன்னீர் மீன்பிடியாளர்கள், குளத்தை அண்மித்த பகுதியில் இறங்குதுறையொன்று இல்லாமையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
அத்துடன், ஆற்றுவாழை, சல்வீனியா போன்ற நீர்த்தாவரங்களின் பெருக்கமும் இவர்களது மீன்பிடி நடவடிக்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளத்தின் பாதுகாப்பு, அணைக்கட்டில் ஏற்பட்டுள்ள மண்ணரிப்பு போன்றவற்றை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள போதிலும் இதுவரை அவர்கள் கவனம் செலுத்தவில்லை என மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Post a Comment