நெதர்லாந்து நாட்டின் ராணி ஆக பீடிரிஸ் (75) பதவி வகித்து வந்தார். முதுமை காரணமாக இவர் தனது அரசாட்சியை துறந்தார். அதைத் தொடர்ந்து புதிய மன்னர் ஆக அவரது மகன் வில்லெம்-அலெக்சாண்டர் அறிவிக்கப்பட்டார். இதனால் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் உள்ள அரண்மனையில் நேற்று அவர் மன்னராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவரது மனைவி மாஸிமா (41) ராணி ஆக முடி சூட்டப்பட்டார். இவர் அர்ஜென்டினாவை சேர்ந்தவர். பதவி ஏற்றபின் மன்னர் வில்லெம் – அலெக்சாண்டர், மனைவி ராணி மாஸிமா மற்றும் 3 குழந்தைகளுடன் அரண்மனை பால்கனிக்கு வந்தார்.
அங்கு அரண்மனையின் முன்பு திரளாக கூடியிருந்த மக்களை பார்த்து அவர்கள் கையசைத்தனர். முன்னதாக, மன்னரின் தாயாரும் முன்னாள் ராணியுமான பீடிரிஸ் தனது அரசாட்சியை துறக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுதார். அக்காட்சி அரண்மனை முன்பு வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. அதை பார்த்த மக்களும் உணர்ச்சி வயப்பட்டு கதறி அழுதனர்.
ஐரோப்பா கண்டத்தில் பல நாடுகளில் அரச வம்சத்தினர் உள்ளனர். தற்போது அவர்களில் மிக இளமையான மன்னராக வில்லெம் – அலெக்சாண்டர் திகழ்கிறார்.
இவருக்கு 46 வயது ஆகிறது. மேலும் சர்வதேச அளவில் 21-ம் நூற்றாண்டில் பதவி ஏற்ற முதல் மன்னர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்தியன் வீட்டுத்திட்டத்திற்கு மண்டைதீவில் 186 குடும்பங்கள் தெரிவு-
இந்தியன் வீட்டுத்திட்டத்திப் படி மண்டைதீவில் முதற்கட்டமாக 186 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியன் வீட்டுத்திட்டத்திப் படி மண்டைதீவில் முதற்கட்டமாக 186 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மண்டைதீவில் ஜேஃ07, ஜேஃ08, ஜேஃ09 உட்பட்ட கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 186 பயனாளிகளே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி ஒரு குடும்பத்திற்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. இது 4 கட்டங்களாக வழங்கப்படவுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா வங்கியில் இடப்படும். அதனையடுத்து 2ஆம் 3ஆம் கட்டங்களில் 2 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
இறுதியாக 50ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பயனாளிகள் 6 மாதங்களில் முழுமையாக வீட்டினைக் கட்டி முடித்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment