60 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு கட்டண அதிகரிப்பு இல்லை!



60 அலகுகள் வரையான மின் பாவனையாளர்களுக்கு, அதிகரிக்கப்பட்ட புதிய மின் கட்டண நடைமுறை அமுலாகாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

60 அலகுகள் மற்றும் அதற்கு உட்பட்ட மின் பாவனைளார்களுக்கு பழைய முறைப்படியே கட்டணம் அறவிறப்படவுள்ளது. 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 

இதேவேளை 180 அலகுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger