இராணுவத்தின் புகழ் பாடும் முன்னாள் புலி தளபதி கருணா அம்மான்! / மே தினம்: சாந்தினினுக்கு தலையில், ராதாவுக்கு கையில் அடி


 

karuna-mahindaஇராணுவத்தின் புகழ் பாடும் முன்னாள் புலி தளபதி கருணா அம்மான்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு வெளிநாட்டுத் தமிழர்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உண்மை நிலைவரம் தெரியாது என்று தெரிவித்து உள்ளார் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்.இவர் இது குறித்து தெரிவித்து உள்ளவை வருமாறு:-
புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு வடக்கு, கிழக்கின் உண்மையான கள நிலைவரம் தெரியாது.
இவர்களில் ஒரு தொகையினர் 40 வருடங்களுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறியவர்கள். இவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே பிறந்ந்தனர். இப்பிள்ளைகளுக்கு வடக்கு, கிழக்கு பற்றி எதுவுமே தெரியாது. இப்பிள்ளைகள் புலி ஆதரவு தமிழர்களால் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபகீர்த்திப் பிரசாரங்களை நம்பி விடுகின்றனர்.
தப்பிப் பிழைக்க வேண்டிய தேவை புலிச் செயற்பாட்டுப் புலம்பெயர் குழுக்களுக்கு உள்ளது. இதனால் குழப்பங்களை ஏற்படுத்த முயல்கின்றனர். இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்கிற அச்சமும் இவர்களுக்கு உள்ளது. எனவே இலங்கை அரசுக்கு எதிராக அடிப்படை அற்ற வகையில் மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இவர்கள் சொல்வது போல இலங்கையில் எதுவும் இல்லை. இராணுவத்தின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் ஏராளமான அபிவிருத்தி வேலைகளை அரசு செய்து வருகின்றது. இராணுவத்தின் மனித வலு நாட்டின் அபிவிருத்திக்கு அரசால் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணமாக முல்லைத்தீவில் இராணுவத்தின் உதவியுடன் ஒரு வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு இராணுவம் பல வழிகளிலும் உதவி செய்கின்றது. ஆனால் புலிச் செயற்பாட்டுப் புலம்பெயர் குழுக்கள் தேவை இல்லாத பிரச்சினைகளை வடக்கு, கிழக்கில் உருவாக்க முயல்கின்றன.
ஆயினும் புலம்பெயர் தமிழர்களில் ஏராளமானோர் மனம் திருந்தி உள்ளனர். சிலர்தான் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க முயல்கின்றனர். போராட்டத்தின் பெயரால் புலிகளுக்கு பணம் வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டமையை புலம்பெயர் தமிழர்கள் மறக்க முடியாது.
மே தினம்! சாந்தினினுக்கு தலையில், ராதாவுக்கு கையில் அடி
மலையக மக்கள் முன்னணியின் மே தின கூட்டம் இடம்பெற்ற மேடை உடைந்து விழுந்ததில் அக் கட்சியின் தலைவி, அரசியல் துறை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு அடிபட்டுள்ளது.
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய மைதானத்தில் மே தினக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போதே மேடை உடைந்து விழுந்துள்ளது.
இதன்போது மேடையிலிருந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி சந்திரசேகரனுக்கு தலையில் அடிபட்டுள்ளது.
இதேவேளை அக் கட்சியின் அரசியல் துறை தலைவர் ராதா கிருஷ்ணனுக்கு கையிலும் செயலாளர் லோரஸுக்கு இலேசான அடியும்பட்டுள்ளது.
இன்று (01) பகல் 2.30 – 3.00 மணிக்கு இடையிலான நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் மே தின கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger